பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான வில்லியம் ஜென்னிங் ப்ரெயன் (1860- 1925), சிறந்த நாடாளுமன்றவாதியும் வழக்கறிஞரும் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்று முறை (1896, 1900, 1908) போட்டியிட்டு தோல்வியுற்றவர். எனினும் அந்நாட்டின் அரசியலில் ஒரு நிலையான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். அதிபர் வுட்ரோ வில்சனின் அரசில் அமைச்சரவை செயலராக (1913) பணிபுரிந்தவர். இவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி எழுதிய கட்டுரை குறித்து இதழாளர் பாரதி இங்கு சிலாகிக்கிறார்...

விடுதலைப் போரில் அரவிந்தர்- 6

அரவிந்தர் வன்முறையற்ற அகிம்சை முறையை மட்டுமே விரும்பினார் என்று கூற முடியாது. "சமூகப் போராட்டம் சில சந்தர்ப்பங்களில் போராக மாறிவிடும். போர்க்காலத்தின் தார்மீகமும், அமைதியான நேரத்திற்கான தார்மீகமும் வெவ்வேறானவை. சில சந்தர்ப்பங்களில் ரத்தம் சிந்தவோ வன்முறையில் ஈடுபடவோ தயங்குவது பலவீனமே. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பெரும் அழிவு ஏற்படுமெனத் தயங்கியபோது ஸ்ரீ கிருஷ்ணர் அவரை இடித்துரைத்துக் கூறியது இதைதான்" என்று அரவிந்தர் எழுதியிருந்தார்....

பாரதியும் கணபதியும்

பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.

ஸ்வாமி அபேதாநந்தர்

சுவாமி அபேதாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். அவரது சென்னை விஜயத்தால் மகிழ்ந்து இதழாளர் பாரதி தீட்டிய செய்தி இது... சுவாமி அபேதாநந்தா குறித்து ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார் மகாகவி பாரதி.

மகாவித்துவான் சரித்திரம்- 1(14)

இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு 'வித்துவான்' என்பது காணப்படும்.....

நமது மகமதிய சகோதரர்கள்

ஹிந்து- முஸ்லிம் மத வேற்றுமைப் பிரச்னை இன்று தோன்றியதல்ல என்பதை மகாகவி பாரதியின் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்த வேற்றுமையை இல்லை என்று ஒளித்துவைத்துப் பிரயோசனமில்லை என்று கூறும் இதழாளர் பாரதி, ”மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப் பற்றி பயமேற்படுகின்றது“ என்று விசனப்படுகிறார். நமது மகமதிய சகோதரர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்ச்சியை எவ்வாறாகிலும் சரிப்படுத்த வேண்டும் என்ற அவரது ஆத்மார்த்த விருப்பமும் இச்செய்தியில் தெரிகிறது......

பாரதி-அறுபத்தாறு- (49-53)

காதலின் புகழைப் பாடும் மகாகவி பாரதியின் இக்கவிதை தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆணும் பெண்ணும் கூடிக் களித்து வாழும் இல்லறமே உலகை வாழ வைக்கிறது. அதற்கு அடிநாதம் காதலே. “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்” என்ற பாரதியின் பிரகடனம், காதலர்களுக்கு அமுத வாக்கு. இறைவனே காதலிக்கையில் மானுடர் காதலின் சுவையை இழக்கலாகுமா? என்பதே கவியின் கேள்வி. அதேசமயம், காதல் என்ற பெயரில் நிகழும் முறைகேடுகளை தனது அடுத்த (54-56) கவிதைகளில் கண்டிக்கவும் அவர் தவறவில்லை.

சத்திய சோதனை- 4(1-5)

கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாக கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். ....

எனது  முற்றத்தில்- 18

அரசியல்/ விளையாட்டு/ சினிமா பிரபலங்களுக்கு ராணுவ கௌரவம் அளிப்பது ஒரு நோக்கத்துடன் தான்.  டெண்டுல்கர், மோகன்லால், சச்சின் பைலட் போன்றவர்கள் பாரத இளைஞர்கள்  மனதில் பதிந்த நட்சத்திரங்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கௌரவம் இளைஞர்கள் மத்தியில் ராணுவம் பற்றிய மதிப்பை உயர்த்தும்.....

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின நிறவெறிக்கும் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடினார் என்று தெரியும். நமது இதே தளத்திலேயே ‘சத்திய சோதனை’ வெளியாகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் பட்ட கஷ்டங்கள் பதிவாகி இருக்கின்றன. அந்தக் கொடுமைகளை ஓர் இதழாளராக வாசகர் முன்பு செய்தியாக வைத்து அவர்களுக்கு உணர்வூட்டுகிறார் மகாகவி பாரதி...

விடுதலைப் போரில் அரவிந்தர்- 5

”வீழ்ச்சி அடைந்த இந்த இனத்தை தூக்கி நிறுத்தும் வல்லமை எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது உடல் வலிமை அல்ல, அறிவு வல்லமை. ஷத்திரிய சக்தி மட்டுமே வல்லமை அல்ல. பிராமண சக்தியும் உள்ளது. அது அறிவை அடிப்படையாகக் கொண்டது. இது எனக்கு புதியதாக ஏற்பட்ட உணர்வு அல்ல. இது நான் பிறக்கும்போதே என் எலும்பு மஜ்ஜையில் உள்ள உணர்வு. இறைவன் இந்த மாபெரும் விஷயத்தை சாதிப்பதற்காகவே என்னை உலகிற்கு அனுப்பியுள்ளார். எனக்கு பதினான்கு வயதிருக்கும்போது இந்த விதை முளைக்கத் தொடங்கியது. பதினெட்டு வயதில் அடித்தளம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டது”... அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள் இவை....

பாலும் பழமும் கைகளிலேந்தி…

கட்டிய மனைவி உடல்நலம் குன்றி இருக்கும்போது அவளைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருத்துவர் கணவனாக சிவாஜி கணேசன் நடித்த அற்புதமான திரைப்படம் ‘பாலும் பழமும்’. இன்றைய தமிழ்த் திரையுலகம் பலநூறு முறை பார்க்க வேண்டிய (இம்போசிஷன்) திரைப்படம் அது. அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கவியரசரின் காவிய வரிகள் இவை...

மகாவித்துவான் சரித்திரம்- 1(13)

சூதசங்கிதையென்பது ஸ்கந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப் பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும்.....

ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்

அமெரிக்க நாட்டில் என்ன நடக்கிறது? அங்குள்ள அதிபர் ரூஸ்வெல்ட் (1906) அந்நாட்டு மக்களுக்கு செய்யும் கடமை என்ன? (அவர் தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல). அந்நாட்டில் சில மாகாணங்களில் ஜப்பான் தேசத்தாருக்கு எதிரான மனநிலை இருப்பது கூடாது என்னும் அதிபரின் மனநிலை,... என உலக அரசியலை நம்மப்வர்க்கு வழங்கத் துடிக்கும் மகாகவி பாரதியின் இதழியல் ஆர்வம் இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...

பாரதி- அறுபத்தாறு- (46-48)

முந்தைய பாடலில் பெண் விடுதலை குறித்துப் பாடிய மகாகவி பாரதி, இந்த மூன்று பாடல்களில், பெண் என்பவள் தாய், தாரம், தமக்கை, தங்கை, மகள் எனப் பல வடிவில் உடனுறைபவள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆண்களால் பெண்மை அடிமை யுற்றால் மக்களெலாம் அடிமையுறல் வியப்படைய வேண்டியதில்லை என்றும் சொல்கிறார்....