யந்திரம்

மானுட உணர்வுகளின் ஆதி ஆழத்தை அறிபவர் யாரும் இருக்க முடியாது. புனைவிலக்கியம் அந்த வெற்றிடத்தை நோக்கிய பாய்ச்சல். ஜெயகாந்தன் அவர்கள் கூறுவது போல சஹ்ருதயர்களால் மட்டுமே பிறரது உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கு அவரே இச் சிறுக்கதையில் சொல்வது போல, கூடு விட்டு கூடு பாயும் திறன் வேண்டும். முத்தாயியின் கதை உங்களுக்குள்ளும் சிறு சலனத்தை ஏற்படுத்தினால், உங்களாலும் கூடு விட்டு கூடு பாய முடிகிறது என்று பொருள்.

சிவகளிப் பேரலை – 46

முந்தைய ஸ்லோகத்தில் மனத்தை பறவையாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இங்கே  அதனை ஓர் அன்னப் பறவையாக உருவகப்படுத்துகிறார். அன்னப்பறவை அழகு பொருந்திய மாளிகைக்குள் வளர்க்கப்படும் பேறு பெற்றது. சிவபெருமானின் திருவடிகளே, மனமாகிய அன்னம் சுகித்திருக்கும் மாளிகை என்பதை அழகு மிளிர எடுத்துரைக்கிரார் ஆதிசங்கரர்....

பாரதியின் ஞானப்பாடல் – 25

கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்கு குறிப்பிடுகிறது. ‘யோவான்’ என்பது குமார தேவனுடைய பெயர். ‘அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் மோக்‌ஷ நிலையை அடைவதற்கு முன்னர் குழந்தைப் பருவத்தை அடைய வேண்டும்’ என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது.....

எனது முற்றத்தில் – 9

தமிழக முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எளிய தமிழில் எழுதி 1957இல் வெளியிட்டார். 50 ஆண்டுகளுக்குள் இரண்டும் 10 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததன; விற்பனையில் சாதனை என்று மட்டுமல்ல, தமிழ் மண்ணின் ஆன்மிக தாகம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்....

சிவகளிப் பேரலை- 45

பறவை அதன் குடும்பத்தோடும் இனத்தோடும் கூடி வாழ்கின்ற இடம் கூடு. அந்தக் கூடுதான், பறவைக்குப் பாதுகாப்பையும், சௌகர்யத்தையும், சுகங்களையும் தருகிறது. அதேபோல் பக்தனின் மனதாகிய பறவைக்கு, இறைவனின் திருவடிகளே சிறந்த சரணாலயம். ..

பாரதியின் ஞானப்பாடல்- 24

மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் 24வது கவிதை இது...வெள்ள மெனப் பொழியும் தண்ணருளில் ஆழ்ந்தபின் வேதனை உண்டோ?

சிவகளிப் பேரலை – 44

சிங்கத்துக்கும் சிவபெருமானுக்கும் சிலேடையாக இந்த ஸ்லோகத்தை உரைத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். இறைச் சிங்கம் எனது மனக்குகையிலே வீற்றிருக்க, எனக்கு எவ்விதத்தில் அச்சம் வரும்? என்று கேட்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

பாரதியின் ஞானப்பாடல் – 23

ஒருமையுணர்வின் (அத்வைதம்) உச்சநிலை இப்பாடல். பகைவனுக்கு அருள்பவர்க்கு எதிரிகளே இருக்க முடியாது. ஏனெனில் அவர் இறைவனை அறிந்தவர் ஆகிறார்...

சிவகளிப் பேரலை – 43

மகாபாரதத்திலே அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தருள, வேடனாகத்தான் அவன் முன்னர் சிவபெருமான் காட்சி தருகிறார். அவருக்கு கிராதமூர்த்தி என்றும் பெயருண்டு. அப்பேர்பட்ட சிறந்த வேடனாகிய சிவபெருமான் வசிப்பதற்கு, உண்மையிலேயே சிறந்த வனம் எது தெரியுமா? பக்தனின் மனம்தான்....

பாரதியின் ஞானப்பாடல்- 22

மனதைக் கட்டுப்படுத்துதல் முனிவர்க்கும் அரிது. அந்த மனம் செய்யும் கொடுமைகளை இங்கு பட்டியலிடுகிறார் மகாகவி பாரதி.