சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 25 வயது இளைஞர் சென்னையிலிருந்து கொல்லம் சென்றார். மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது அவர் முன் இருந்த பணி. ஒருநாள் இடைவேளையில் கண்ணப்ப நாயனார் கதையை உணர்ச்சிபூர்வமாக இந்த இளைஞர் சொன்னார்; அந்த கேரளப் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிவபக்தி உள்ளவர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டதாக அந்த இளைஞர் திரும்பி வந்தபின் என்னிடம் சொன்னார். எனக்குப் பொறி தட்டியது. நூலகங்களில் என்னதான் புத்தகங்கள் நிரம்பி வழியட்டுமே, மரத்தடியில் பிள்ளைகளை அமர வைத்து மனதார கதை சொன்னால் அதன் குணமே தனி. தமிழ் இளைஞர், மலையாளப் பிள்ளைகளை எப்படி அந்தக் கதையின் உணர்ச்சி வளாகத்திற்குள் கொண்டுவந்தார்? மெத்தப் படித்தவர்கள் தொட்டது வைத்ததற்கு எல்லாம் லாங்வேஜ் பிராப்ளம் என்று புலம்புவார்களே, அதெல்லாம் எங்கே போயிற்று இந்தச் சம்பவத்தில்?
Day: June 21, 2022
பாரதியின் ஞானப்பாடல் – 17
மகாகவி பாரதியின் ஞானப்பாடல்களில் எளியவர்களின் பக்தியும் மெச்சப்படுகிறது... இக்கவிதை அதற்குச் சான்று.
சிவகளிப் பேரலை – 37
பாற்கடலைக் கடந்தால் பல்வேறு பயன்களுக்காக பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. ஆனால், பக்தர்கள் வேதக்கடலைக் கடையும்போது இந்த அனைத்துப் பொருட்களின் பலன்களையும் உள்ளடக்கிய சிவபெருமானே காட்சி தந்து நம்மை ஆட்கொள்கிறார். ...