பாரதியின் ஞானப்பாடல் – 3

சிட்டுக்குருவிக்கென்றே தனிக்கவிதைத் தொகுப்பு எழுதிய மகாகவி பாரதி, அதனைப் போற்றுவதன் காரணம் அதன் விடுதலை உணர்வே. அகண்ட வானமே வீடாகக் கொண்ட, எல்லையற்ற - கட்டற்ற- கவலையற்ற வாழ்க்கை சிட்டுக்குருவியுடயது. அதனைப் போல வாழத் துடித்தவர் அடிமை வாழ்வகற்றத் துடித்த நமது சுதந்திரக் கவிஞர் பாரதி.

சிவகளிப் பேரலை- 23

மகாவிஷ்ணு பன்றி ரூபம் எடுத்து பூமியைத் துளைத்துக்கொண்டு அந்தச் சோதி லிங்கத்தின் அடியைக் காணவும், பிரம்மன் அன்னப் பறவை வடிவெடுத்து ஆகாய மார்க்கமாய் சோதி லிங்கத்தின் முடியைக் காணவும் முயன்று தோற்றுப் போனார்கள்.  கல்விக் கடவுள் சரஸ்வதியின் நாதன் பிரும்மா, செல்வக் கடவுள் திருமகளின் நாயகன் விஷ்ணு. கல்விச் செருக்கால் தலை ஆகாயத்தில் மிதக்கும். செல்வச் செருக்கால் பணம் பாதாளம் வரை பாயும். ஆயினும் செல்வச் செருக்காலோ, கல்விச் செருக்காலோ பரம்பொருளைப் பார்த்தறிய இயலாது, எளிமையான பக்தியே அதனைச் சாதிக்கும் என்பதே இப் புராணக் கதையின் மையக்கருத்து....

ஜாதி 1

வெளித் தேசத்தாருக்குத் தர்மோபதேசம் செய்கையில் நமது நாட்டில் குற்றங்கள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? இங்கே அநாவசியமான ஜாதி விரோதங்களும் (அன்புக் குறைவுகளும்) அவமதிப்புகளும் வளர விடலாமா? அவற்றை அழித்து உடனே அன்பையும் உடன் பிறப்பையும் நிலை நாட்டுவது நம்முடைய கடமையன்றோ?

இலக்கிய தீபம் – 9

பல சுவடிகளை ஒப்புநோக்கித் திருத்தமான பாடங்களைக் கண்டு, நூதனமாக ஓர் உரையெழுதி 1937-ல் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வெளியிட்டார்கள். இப்பதிப்பே இதுவரை வெளிவந்துள்ள குறுந்தொகைப் பதிப்புக்கள் அனைத்திலும் சிறந்ததாகும். இதுவே இப்போது பலராலும் கற்கப்பட்டு வருவது. ஸ்ரீ ஐயரவர்கள் வெளியிட்ட இப்பதிப்பிலும் திருந்த வேண்டிய பகுதிகள் சில உள்ளன. அவற்றுள் ஒன்றைக் குறித்து இங்கே கூற விரும்புகிறேன்....