
.
சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்தி பிள்ளை (1897 – 1971) அவர்கள், தனது காலத்தில் ஆரிய- திராவிடப் புரட்டுக்கு எதிராகவும், நாத்திக இயக்கங்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு எதிராகவும் களமாடிய சைவ சித்தாந்தப் பேரறிஞர்.
அவரது ஐம்பதாவது நினைவு ஆண்டில், நண்பர் நெல்லை சொக்கலிங்கம், அவரது படைப்புகளைத் திரட்டித் தொகுத்து அற்புத நூலாக்கி இருக்கிறார். அந்த நூல் குறித்த, எழுத்தாளர் திருநின்றவூர் ரவிகுமாரின் மதிப்புரை இது.
2. மகான்களின் பொன்மொழிகள் 1000 பாகம்1

இந்நூலில் மகான்கள் சொன்ன பொன்மொழிகள் 11 பகுதிகளில் 147 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இத்தனை மகான்கள், இத்தனை நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போதே மலைப்பு ஏற்படுகிறது.
இதனைத் தொகுத்தவர், மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மஹராஜ் அவர்கள். சென்னை ராமகிருஷ்ன மடத்தின் நேர்த்தியான வெளியீடு. எழுத்தாளர் திருநின்றவூர் ரவிகுமாரின் நூல் அறிமுகப் பதிவு இது.

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).
…பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
…தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது…
அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.

பேரறிஞர் தரம்பால் தாம் எழுதிய – அழகிய மரம், அழகிய நதி, அழகிய போராட்டம், அழகிய கிராமம் ஆகிய 4 நூல்களின் சாராம்சத்தை எளிய நடையில் அந்தந்தப் புத்தகங்களுக்கான முன்னுரையாக எழுதி இருக்கிறார். ’அழகிய இந்தியா’ என்ற இந்தப் புத்தகம் அப்படியான முன்னுரைகளின் தொகுப்புதான்.
தரம்பால் தொகுத்த ஆவணங்களை வேறு யாரேனும் ஒருவர் சுருக்கி எழுதுவதைவிட அவர் எழுதிய முன்னுரைகளின் தொகுப்பான இந்த நூல் அதிகாரபூர்வ ஆவணத்துக்கான முழு மதிப்புடனே உருவாகியிருக்கிறது.
அனைத்துத் துறைகளிலும் பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய பாரதம் எப்படி உயரிய நிலையில் இருந்தது என்பதை பிரிட்டிஷாரின் ஆவணங்களைக் கொண்டே நிரூபித்த மகத்தான சாதனையின் கையடக்க அறிமுகம் இது.

‘நாவல்‘ எனப்படும் புதினம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி நூறாண்டு ஆகிறது; ஆங்கில இலக்கியத்தின் தாக்கத்தால் புதிய உரைநடையில் நெடுங்கதைகளை வடிப்பது தமிழிலும் துவங்கியது. அந்த வகையில் தமிழின் முன்னோடி நாவலாக, அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் விளங்குகிறது. தமிழ் நாவல்கள் பட்டியலில் மூன்றாவது நாவலான இந்நூல், தரத்தில் நூறாண்டு கடந்தும் முதன்மை வகிப்பது, மாதவையாவின் சமகால நோக்கிற்கு உதாரணம். தமிழ் இலக்கிய உலகில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்ட அ.மாதவையாவின் முதல் நாவலான பத்மாவதி சரித்திரம், மூன்று காலகட்டங்களில் மூன்று பாகங்களாக எழுதப்பட்டது. இதில் முதல் இரு பாகங்களே பெரும்பாலான பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டுள்ளன. காவ்யா பதிப்பகம், இதுவரை வெளியாகாமல் இருந்த, முற்றுப்பெறாத மூன்றாவது பாகத்தையும் இணைத்து செம்மையான பதிப்பாக வெளியிட்டுள்ளது. மாதவையாவின் சமுதாய நோக்கு, இலக்கிய பரிச்சயம், சீர்திருத்தச் சிந்தனை, மெல்லிய நகைச்சுவை உணர்வு ஆகியவை நாவல் முழுவதும் விரவிக் கிடப்பதைக் காண முடிகிறது. பழமையின் பிடியில் சமுதாயம் தத்தளித்த காலத்தில், விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பெண்ணுரிமைகளை வலியுறுத்தி துணிவுடன் நாவல் எழுதிய அ.மாதவையா இன்றைய எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக விளங்குகிறார்…
6. நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும், அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது….

பாரதம் அருளாளர்களின் ஜென்மபூமி. இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு அருளாளரின் புனிதத்தலத்தை தரிசிக்க முடியும். இந்த அருளாளர்கள் அனைத்து வகுப்பினரிலும் அவதரித்திருப்பதையும் காண முடியும்; சமுதாயத்தை ஒருங்கிணைக்க இறைவனே நடத்திய திருவிளையாடல்களின் பல கதைகளை நாம் கேட்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மண்ணில் உதித்து பக்திப்பயிர் வளர்த்த பக்தப் பரம்பரை தான். மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் தான் இந்த மகாபக்தர்களை உலகிற்கு அடையாளம் காட்டியது.
பண்டரிபுரத்தில் விட்டலனை எழுந்தருளச் செய்த புண்டலீகன் கதை முதல், பூனைக்குட்டிக்காக குலத்தொழிலை தியாகம் செய்த ராகாகும்பர் வரை, அருண் சரண்யாவின் ‘தீராத விளையாட்டு விட்டலன்’ நூலின் ஒவ்வொரு பக்கமும் பக்திப் பிரவாகமாகப் பெருக்கெடுத்தோடுகிறது. இத்தகைய மகான்கள் பிறந்த மகத்தான பூமியிலா நாம் வாழ்கிறோம்? பல இடங்களில், படிக்கப் படிக்க நெஞ்சு விம்முகிறது.

பன்மொழிப் புலவரும், புத்தத் துறவியும், ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தையுமான ராகுல சாங்கிருத்தியாயன், மார்க்சியத் தத்துவம் இந்திய இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான முன்னோடிகளுள் ஒருவர். இவர் சிறையிலிருந்தபடி எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புதினம் 1944ல் வெளியானது. அப்போதே பலத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்நாவல், இதன் உள்ளடக்கத்தாலும், இடதுசாரிப் பார்வையாலும் பிரபலம் அடைந்தது.
எனினும், அடிப்படையில் இப்புதினம், பல்வேறு காலகட்ட நிகழ்வுகளின் அறுந்த கண்ணிகளின் தொடராகவே உள்ளது. மானிட வளர்ச்சியின் பல்வேறு நிலைகளை தனது கற்பனை வளத்தால் தீட்டிக் காட்டும் ராகுல், ஆரிய- திராவிட இனவாதம் என்ற வழக்கொழிந்த வரலாற்றுவாதத்தின் மீது இப்புதினத்தைக் கட்டமைத்திருக்கிறார். தற்காலத்தில் கிடைத்துள்ள பல ஆதாரங்கள் இந்த சிந்தனைப்போக்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
9. அழகிய மரம்

18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.
காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள், ஆங்கிலத்தில் ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள் ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்.
“பிரிட்டிஷார் பாரதம் வருவதற்கு முன்பு இங்கு இயல்பாயிருந்த நிலையிலிருந்து கல்வியை வளர்க்காமல், மண்ணைத் தோண்டி வேருடன் பிடுங்கி ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். அதன்பிறகு அந்த வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அந்த அழகிய மரம் அழிந்து விட்டது” என்பது, பண்டைய பாரதத்தில் இருந்த கல்வி முறையை அழித்த பிரிட்டிஷார் பற்றி காந்தியடிகள் கூறிய கருத்து….
10. லஜ்ஜா

பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்.
“மதச்சார்பு இல்லாமல் மனித நேயத்துடன் சிந்திக்கும் அனைவரும் ஒன்றுசேர்ந்து தீயசக்திகளுக்கு (இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு) எதிராகத் தீவிரமாகப் போராடினால்தான் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். அதுவரையிலும் எனது எதிர்ப்பை என்றும் நிறுத்திக்கொள்ள மாட்டேன்” என்று நூலின் முன்னுரையில் பிரகடனம் செய்கிறார் தஸ்லிமா. ஆனால், இந்தியாவில் மதச்சார்பின்மை பேசுவோர்தான் தஸ்லிமாவை வேப்பங்காயாக ஒதுக்குகிறார்கள்….
11. நவகவிதை

அரவிந்த மகரிஷியின் 150 ஜெயந்தி ஆண்டு இது. அவர் பாரதம் எழுச்சி பெற வேண்டும் என்றார். காரணம், பாரதம் உயர்வது என்றால் உலகில் நற்பண்புகள் அதிகரிக்கிறது என்பதே அர்த்தம் என்றார். கவிஞர் வ.மு.முரளியும் இதை எதிரொலிக்கிறார் ‘ஜய ஜய பவானி’ என்ற கவிதையில். நவகவிதை என்றால் புதிய கவிதை என்பது மட்டுமல்ல, ஒன்பது கவிதைகள் என்றும் பொருள். நவராத்திரியை முன்னிட்டு நாளுக்கு ஒன்றென ஒன்பது நாளும் புனைந்த கவிதைகளின் தொகுப்பு இச்சிறு நூல்.
நவராத்திரியில் தலா மூன்று நாட்கள் என மூன்று பெரும் தேவியர்கள் சமமாக வழிபடப் பட்டாலும் கவிஞர் திருமகளுக்கு அதிகம் (வரிகள்) இடம் கொடுப்பது இவரை நடைமுறைக் கவிஞராக்குகிறது….
12. திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்: நூல் அறிமுகம்

தமிழகத்தின் போக்கை மாற்றி அமைத்ததில் திராவிட அரசியலின் பங்கு மிகப் பெரிது. இன்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக திராவிட இயக்கம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நாம் அனைவரும் நம்பும் திராவிட இயக்கம் என்ற ஒன்று என்றாவது இருந்ததுண்டா? இந்தக் கேள்வியே திடுக்கிடலை ஏற்படுத்தக் கூடியது.
இந்தக் கேள்வியுடன், ‘அப்படி எந்த ஒரு இயக்கமும் இருந்ததில்லை’ என்ற தெளிவான பதிலுடன் தான் இந்த நூலையே ஆரம்பிக்கிறார், மலர்மன்னன். தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளராக இருந்த, அண்மையில் மறைந்த மலர்மன்னன், திமுக நிறுவனர் அண்ணாதுரையின் நெருங்கிய நண்பராக இருந்தவர். கடந்த நூற்றாண்டின் முக்கிய அரசியல் தருணங்களில் நேரடி சாட்சியாக நிகழ்வுகளைக் காணும் வாய்ப்பு பெற்றவர்.
…ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா? இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.