பிரிட்டனில் வெளியான ‘நியூ ஸ்டேட்ஸ்மென்’ பத்திரிகையின் செய்தியை சுதேசமித்திரன் வாசகர்களுக்கு தமிழில் பெயர்த்து வழங்கும் மகாகவி பாரதியின் மொழித்திறனும், இதழியல் கடமை உணர்வும், அவற்றை விஞ்சும் உலக அரசியல் நுண்ணுணர்வும் நம்மை வியக்கச் செய்கின்றன. இச்செய்தியை தமிழர்களுக்கு அளிக்க, நம்மவர்கள் அரசியல் அறிவு பெறுவது அவசியம் (அப்போதுதானே சுதந்திரப் போரில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்?) என்ற எண்ணமே காரணம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்டியாக வேண்டும்.
Month: February 2023
பகலவனே வாழி!
திருமதி கீதா குமரவேலன், குடியாத்தத்தில் உள்ள அரசு பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிகிறார். ‘வள்ளலார் காட்டிய பெருநெறி’ என்ற நூலை எழுதி இருக்கிறார். இவரது கவிதைகள் பல பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன; பட்டிமண்டபப் பேச்சாளராக ஆன்மிகப் பயிர் வளர்க்கிறார். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இங்கே....
என்றன் நெஞ்சகம் ஏந்திழை பாலதே
‘சக்கரவர்த்தினி’ 1906 பிப்ரவரி மாத இதழில் வெளிவந்த ‘துளஸிபாயி என்ற ராஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற கதையின் இரண்டாம் அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது இப்பாடல்.
புதிய பாரதம் தலையெடுக்க….
திரு. ச.சிவசுப்பிரமணியன் கணக்குத் தணிக்கையாளர். திருப்பூரில் இயங்கும் அறம் அறக்கட்டளையின் தலைவர். பல்வேறு ஆன்மிக அமைப்புகளிலும், ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பிலும் செயல்படுபவர். 2சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது எழுதப்பட்ட அன்னாரது கட்டுரை இது…
தமிழ்த்தாயைக் காத்த தனயன்
பொதிகை மலையில் வாழ்ந்த அகத்திய முனிவர் தமிழை வளர்த்தார் என்பது தெரியும். கும்பகோணம் அருகே பிறந்த மற்றோர் அகத்தியர் தமிழைக் காத்தார் என்பது தெரியுமா?
ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்
பிரான்ஸ் நாட்டின் லட்சிய முழக்கம் - ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம். பிரெஞ்ச் இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்று, புதுவையிலிருந்து ‘இந்தியா’ பத்திரிகையை (10.19.1908 – 17.05.1910) நடத்திய மகாகவி பாரதியை, பிரான்ஸ் தேசத்தின் பிரதானக் குறிக்கோளான ‘ஸ்வதந்திரம், ஸமத்துவம், சகோதரத்துவம்’ ஆகியவை கவர்ந்ததில் வியப்பில்லை. இதுகுறித்து ‘இந்தியா’ பத்திரிகையின் மூன்று இதழ்களில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரைகள் இவை....
எழுச்சி பெற்ற இளைஞர்களே வருக!
‘பாரத ரத்னா’ மேதகு டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், பாரதத்தின் 11-வது ஜனாதிபதியாக இருந்தவர்; இளைஞர்களின் எழுச்சி நாயகர். சுவாமி விவேகானந்தர் மீது அளப்பரிய பக்தி கொண்டவர் கலாம். அன்னாரது உரை இங்கே கட்டுரை வடிவில் வெளியாகி இருக்கிறது….
விளக்கு
‘சக்திதாஸன்’ என்ற பெயரில், சுதேசமித்திரன் இதழில் மகாகவி பாரதி எழுதிய கட்டுரை இது. கல்வி வளர்ச்சியே சமுதாயத்தின் வழிகாட்டும் விளக்கு என்று இக்கட்டுரையில் அறிவுறுத்துகிறார் பாரதி.
விவேகானந்தர் – குழந்தைப்பாடல்
‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. சேக்கிழான் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த மழலைப்பாடல்...
சங்க காலம் (எதிர்) சாராய காலம்
சங்கத் தமிழ்க் கவிதைகளை தற்கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி சிந்தனையைத் தூண்டுவதில் எழுத்தாளர் திரு. ச.சண்முகநாதன் சிறப்பிடம் வகிக்கிறார். தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய அரும்பணி இது...
மகாகவியின் மறுபக்கம்
பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி, ‘தினமணி’ நாளிதழில் எழுதிய கட்டுரை இது....
வீர நரேந்திரா விவேகானந்தா!
சென்னையில் வசிக்கும் விவேகானந்தரின் தீவிர அபிமானியான திரு. விவேகானந்ததாசன், அவரது கருத்துகளை இணையவழியாகப் பரப்பி வருபவர். அன்னாரது கவிதைப் பாடல் இது....
மயக்கமா, கலக்கமா?
‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்; வாழ்வில் கலக்கம் சூழும் தருணங்களில் மனம் தெளிவு பெறக் கேட்க வேண்டிய அற்புதமான திரைப்பாடல்….
பாவி என்பதுதான் பாவம்
ஹிந்துக்களின் பாவ- புண்ணியக் கோட்பாட்டிற்கும், கிறிஸ்தவர்களின் பாவக் கோட்பாட்டிற்கும் என்ன வித்தியாசம்? சுவாமி விவேகானந்தரின் வழியில் விளக்குகிறார், எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
மகாகவி பாரதியின் இறுதி நாட்கள்
பாரதி ஆய்வாளரான ரா.அ.பத்மநாபன், பாரதியின் அரிய புகைப்படங்கள், அவரைச் சார்ந்திருந்தோரின் புகைப்படங்கள் ஆகியவற்றோடு வேறு யாரும் அறிந்திராத பல தகவல்களையும் சேர்த்துத் தொகுத்து, ‘சித்திர பாரதி’ என்ற நூலை வெளியிட்டார். 1957ல் முதலில் வெளியான இந்த நூலில், பாரதியாரின் கடைசி சில தினங்கள் எப்படியிருந்தன என்ற தகவல்களை மிக நுணுக்கமாகத் தொகுத்திருக்கிறார் அவர். அதிலிருந்து சில பகுதிகள்: