ஸ்வதந்திர கர்ஜனை- 2(29)

1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு தில்லி மாநகரில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்தியாவின் மூவண்ண சுதந்திரக் கொடி ஏற்றப்படுகிறது. அரசியல் சட்டம் இயற்ற அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை கூடுகிறது. தலைமைப் பீடத்தில் பாபு ராஜேந்திர பிரசாத். சரியாக 12 மணிக்கு ஜவஹர்லால் நேரு எழுந்து நாட்டு மக்களுக்கு ஓர்  உரையாற்றுகிறார்.   மிகப் பிரபலமான அவரது உரையின் தமிழக்கத்தை இப்போது பார்ப்போம்....

விளையும் பயிர் (கவிதை)

ரேடியோ அண்ணா என்ற பெயரில் பிரபலமாக அழைக்கப்பட்ட அமரர் திரு. ஆர்.அய்யாசாமி சென்னை வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில் (1963), வானொலியில் ஒலிபரப்பான சிறுவர் பாடல் இது.

ஐர்லாந்துக்கு ஸ்வதந்த்ரம் கொடுக்க மாட்டோம்

இந்தியாவைப் போலவே அயர்லாந்தும் இங்கிலாந்தால் அடிமைப்படுத்தப்பட்ட தேசம். எனவே அந்நாட்டின் சுதந்திர முயற்சிகளையும், அவற்றை நசுக்கும் பிரிட்டீஷ் அரசையும் இக்கட்டுரையில் தோலுரிக்கிறார் மகாகவி பாரதி. “உலகமெங்கும் ஸமத்வ ஞானத்தை வற்புறுத்துவதாகிய கல்வித் தீ ஓங்கிக் கொண்டிருக்கையில் ஒரு கூட்டத்தார் மற்றொரு பிரமாண்டமான லக்ஷக்கணக்கான ஜனக் கூட்டத்தை எத்தனை காலம் தாழ்ந்த நிலையிலே அழுத்தி வைத்துக் கொண்டிருத்தல் ஸாத்யப்படும்?” என்ற கேள்வி அயர்லாந்துக்கு மட்டுமானதல்ல என்பதை மகாகவி பாரதியை அறிந்தோர் உணர்வார்கள்....