மகாவித்துவான் சரித்திரம்- 1(24)

அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டி நாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்), கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். ....

கடல்

வேதபுரம் கடற்கரையில் துயிலும் கவிக்கு ஒரு கனவு வருகிறது. அதிலும் ஒரு தூக்கம் தூங்குவதாகவே கனவு வருகிறது. அதையும் (கனவுக்குள்ளே ஒரு தூக்கம்) என்று அடைப்புக் குறிக்குள் சொல்லிச் செல்லும் நையாண்டி, மகாகவி பாரதியின் நகைச்சுவை உணர்வும், எந்தக் கதை சொன்னாலும் இறுதியில் இறை நம்பிக்கைக்குக் கொண்டுசெல்லும் லாவகமும், கடல் கதையில் அலை அலையாய் வருகின்றன...

தேசிய ஆன்மா!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) அகில பாரத பொதுச் செயலாளராக இருந்த உயர்திரு. ஹொ.வெ.சேஷாத்ரி (1926- 2005),  ஹிந்துத்துவ சிந்தனையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.  ‘தேசப் பிரிவினையின் சோக வரலாறு’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். சுவாமி விவேகானந்தர் குறித்த இக்கட்டுரை, ஆங்கிலப் பத்திரிகையான ‘பிளிட்ஸ்’ மாத இதழில் (1993 ஆகஸ்டு) வெளியானது.  பிற்பாடு  ஆர்.எஸ்.எஸ். வார இதழ்  ‘விஜயபாரதத்தில்’  வெளியானது. இதை தமிழில் வழங்கி இருப்பவர்,  திருநின்றவூர் கே.ரவிகுமார்.

தராசு கட்டுரைகள்- 13

தராசுக்கடையை நெடுநாளாக மூடி வைத்துவிட்டேன். விஷயம் பிறருக்கு ஞாபகத்திலிருக்குமோ, மறந்து போயிருக்குமோ என்ற சந்தேகத்தால் எழுத முடியவில்லை. தராசுக்கடை என்பதென்ன? பத்திரிகை படிப்போர் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ஞாபகம் இல்லாவிட்டாலும் பெரிதில்லை. அந்தக் கடையை மாற்றிவிட்டேன்; தராசு என்ற மகுடமிட்டு இனிமேல் எழுதப்படும் வினாவிடைகளில் கதைக்கட்டு சுருங்கும்; சொல் நேர்மைப்படும்....

ஆன்மநேயம் கண்ட அருளாளர்

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய ஆன்மநேய அருளாளர், வடலூர் திருவருட்பிரகாச ராமலிங்க வள்ளலார். கடும் பஞ்சத்தில் தமிழகம் துயருற்றபோது, அன்னசாலையைத் துவங்கி லட்சக் கணக்கான மக்களின் பசிப்பிணி தீர்த்தவர் வள்ளலார். அவரது பிறந்த தின இருநூற்றாண்டு இன்று (அக். 5) தொடங்குகிறது.

ஸ்வதந்திர கர்ஜனை- 1(4)

கடைசியில் வெள்ளைக்காரர்களுக்கு சுல்தான் செய்த மாபெரும் தவறு ஒன்று கண்ணில் பட்டது. அது, சுல்தான் தனது அயோத்தியை செழுமையாகவும், நல்ல வளத்தோடும் வைத்திருந்த குற்றம் தான். ஒரு இந்திய அரசன் இப்படிப்பட்ட வளம் பொருந்திய நாட்டை, நாம் இங்கு இருக்கும்போது ஆள்வதா? கூடாது. 1856-ஆம் வருஷம் டல்ஹவுசியின் ஒரு கட்டளை மூலம் நவாபின் நிர்வாகம் திருப்திகரமாக இல்லை என்று கூறி நாடு பிடுங்கிக் கொள்ளப்பட்டது.

புதிய கோணங்கி

மகாகவி ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது அசரீரி போன்ற கவிதையை மிக அழகான கதைக்குள் திணித்து இங்கே முரசறிவித்திருக்கிறார். அந்த முண்டாசுக் கோணங்கி வேறு யாருமல்ல, நமது மகாகவியே தான்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்? 

கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களில் முரணான பாலுறவுகள் குறித்த சர்ச்சை இருக்கும். 1975-ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படமும் ஆண்- பெண் இடையிலான உறவுகளின் முரண் தொடர்பானதே. இந்தப் படத்தின் அனைத்து (நான்கு) பாடல்களையும் கவியரசரே எழுதினார்; அனைத்தும் காலத்தை வென்று நிற்கும் கற்பகத் தருக்கள். குறிப்பாக, கதையோட்டத்துக்கு ஏற்றவாறு, இனிய சொற்களால் சமுதாயத்தை முரண்களிலிருருந்து காக்க நினைக்கும் கவியரசரின் பரந்த உள்ளம் இப்பாடல்களில் ஒளிர்கிறது. இங்கு வெளியாகும் பாடலும், படத்தின் கதாநாயகியின் பெண்ணின் தாபமாக, முரண்களை மறுக்கும் ஞானக்குரலாக ஒலிப்பதைக் காணலாம்.

தராசு கட்டுரைகள்- 12

ஆங்கிலேய அரசின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு மகாகவி பாரதி இருக்கிறாரா என்பதை அறிய அவ்வப்போது ஒற்றர்கள் அவரை வேவு பார்ப்பதுண்டு. புதுவையிலிருந்து பிரிட்டிஷ் இந்தியா வந்தபோது கைதான பாரதி - அவரது வழக்கறிஞரின் அறிவுரைப்படி- சில விதிமுறைகளுக்கு உட்படுவதாக வாக்களித்ததால் தான் விடுதலை செய்யப்பட்டார் என்பதை மனதில் இருத்திக் கொண்டால், இக்கட்டுரையில் உள்ள அவல நகைச்சுவையும், தன்னைக் கட்டிப்போட்ட ஆங்கிலேய அரசு மீதான பாரதியின் வெறுப்பும் புலப்படும். அதையும் தராசு கட்டுரையாக வடிக்கும் துணிவு, சுயநலமற்ற எழுத்தாளனுக்கே உரியது.

எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.