சத்திய சோதனை- 4 (21-25)

     குழந்தைகள், பெற்றோரின் உடற்கூற்றை மாத்திரமேயன்றி அவர்களுடைய குணத்தின் தன்மைகளையும் பிதுரார்ஜிதமாகப் பெறுகின்றனர். சுற்றுச் சார்பிலுள்ள நிலைமைகளும் குழந்தைகளின் குணங்கள் அமைவதில் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், குழந்தைகள், மூதாதையர்களிடமிருந்து அடைந்ததையே ஆரம்ப மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன. மூதாதையர்களிடமிருந்து பெறும் தீய தன்மைகளை வெற்றிகரமாகத் தள்ளிவிட்டு வளரும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். ஆன்மாவுக்குத் தூய்மையே இயற்கையான குணமாக இருப்பதனால் இது சாத்தியமாகிறது.....

இந்திய மக்களை தலைநிமிரச் செய்தவர்!

இந்தியாவில் ஆதிசங்கரர்,  ராமானுஜர்,   மத்வர்,  சைதன்யர்,  குருநானக்,  புத்தர்,  மகாவீரர்  போன்ற  மதச்சாரியர்கள்  மகத்தான ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தினார்கள்; மகத்தான ஆன்மிக மறுமலர்ச்சியை  ஏற்படுத்தினார்கள். அந்த வரிசையில் 19-ஆம் நூற்றாண்டில், இந்து மதத்தில் ஒரு மாபெரும்  மறுமலர்ச்சியை,  மகத்தான நல்ல ஒரு தாக்கத்தை  ஏற்படுத்திய மாமனிதர், மகரிஷி சுவாமி விவேகானந்தர்..... மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மகராஜின் இனிய கட்டுரை.....

அர்ஜுன சந்தேகம்

ஒரே கேள்விதான். ஆனால் ஒவ்வொருவரிடமும் வெவ்வேறு பதில்கள். ஆனால் அனைத்திலும் லோக நன்மை தான் பிரதானம். இது சிறிய கதை தான். ஆனால், இந்த சிரு வித்துக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம் பிரமாண்டமானது.

மகாவித்துவான் சரித்திரம்- 1(22)

அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப் பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக் கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.....

தராசு கட்டுரைகள்- 7

மேலும் அறிவுத் தராசு போட்டு, உலக வாழ்க்கையின் விதிகளையும், சிரமங்களையும், நிறுத்துப் பார்ப்பதே உனது தொழிலென்பதை மறந்து, வேறு முயற்சிகளிலே சிந்தை செலுத்துகிறாய். புலி பசித்தால் புல்லைத் தின்னுமா? வயிர வியாபாரி ஒரு மாதம் நல்ல வியாபார மில்லாவிட்டால் மொச்சைக் கொட்டைச் சுண்டல் விற்கப் போவானோ? காளிதாசா, கவனத்துடன் கேள். ...

எனது முற்றத்தில்- 21

சுயநலமே இல்லாமல் மற்றவர்களின் துயர் துடைக்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டால் சித்த சுத்தி வாய்க்கும் என்பார் காஞ்சி மஹாசுவாமிகள். சித்த சுத்தியால் தெய்வ தரிசனம் கைகூடும் என்றும் மகான்கள் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.  அனைவருக்குமான ஆன்மிக ராஜபாட்டை இதுதான். அதில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள்  அவரவர் கர்மவினைப் பலனுக்கு ஏற்ப உயரங்களை அடைகிறார்கள் என்பது அனுபவபூர்வமான ஹிந்துத்துவ ஞானம்....

குதிரைக் கொம்பு

மகாகவி பாரதி காலத்திலேயே ஹிந்துப் புராணங்களையும் இதிகாசங்களையும் மனம் போன போக்கில் எழுதி தூஷிக்கும் கும்பல் இருந்தது. இன்று தமிழகத்தில் இருக்கும் நாத்திகக் கும்பலின் தொடக்கம் அது. அநேகமாக மகாகவி பாரதி அயோத்திதாச பண்டிதரின் புளுகுமூட்டைகளைப் படித்திருப்பார் போலிருக்கிறது. ‘குதிரைக்கொம்பு’ என்னும் இந்தச் சிறுகதை வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும், இப்படிச் சிந்திக்கும் முட்டாள்களும் இருப்பதையே பாரதி பகடியாகப் பதிவு செய்திருக்கிறார்....

கங்கை, யமுனை, இங்குதான் சங்கமம்…

கவியரசரின் உள்ளம் என்னும் நதியின் ஆழத்தில் கிடக்கும் வழவழப்பான கூழாங்கற்கள் பன்னெடுங்காலப் பாரம்பரியம் கொண்டவை. அவை அவரது திரைப்பாடல்களில் அற்புதமாக மின்னியபடி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இப்பாடல், அதற்கு மீண்டும் ஓர் உதாரணம்...

தராசு கட்டுரைகள்- 6

தராசு சொல்வதாயிற்று:- தருகிறேனென்று சொல்லும்போதே பின்னிட்டுத் தம்மால் கொடுக்க முடியாதென்பதை அறிந்துகொண்டு சொல்வோர் புழுக்கள். அவர்களைப் படுக்கவைத்துக் கைகால்களைக் கட்டி மேலே ஒரு மூட்டை கட்டெறும்பைக் கொட்டிக் கடிக்கவிட வேண்டும். தருகிறேனென்று சொல்லும்போது உண்மையாகவே கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லிவிட்டுப் பின்பு சௌகர்யமில்லாமையால் கொடுக்காதிருப்போர் முன்யோசனையற்றவர்கள். இவர்களை நல்ல சவுக்கினால் இரண்டடி அடித்துவிட்டுப் பின் முகதரிசனமில்லாமல் இருக்க வேண்டும்.

இருள்

கடமையைச் செய்- செய்துகொண்டே இரு. இதுவே மகாகவி பாரதியின் இக்கதை உபதேசிக்கும் மந்திரம்.