தமிழகத் தேர்தல் களத்தில் நடந்திருப்பது ஓர் அமைதிப்புரட்சி. 1967க்குப் பிறகான அரசியல் புலத்தில் இரு திராவிடக் கட்சிகள் அல்லாத ஒரு கட்சி வெல்வது, அதுவும் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே வெல்வது சாமானியமானதல்ல. இதனைச் சாதித்திருக்கும் நடிகர் விஜய் நிச்சயம் பாராட்டுக்குரியவர். ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அவரது கட்சி கிட்டத்தட்ட வெற்றிக்கோட்டை எட்டிவிட்டது
Tag: தேர்தல்
தமிழகத் தேர்தல்: வாக்குப்பதிவு அதிகரிக்க காரணம் என்ன?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக 84.29 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது. இதற்கு காரணங்கள் என்ன?
எனது தேர்வு
தமிழக சட்டசபைத் தேர்தலில் தனது வாக்கு யாருக்கு என்று வழிகாட்டுகிறார் ஊடகவியலாளர் திருமதி பானு கோம்ஸ்.
கருத்துக் கணிப்புகளும் கருத்துத் திணிப்புகளும்…
உள்நோக்கத்துடனோ, ஒருசார்புடனோ மேற்கொள்ளப்படும் எந்தச் செயலும் உண்மையான பலனை அளிப்பதில்லை. அதனையே மக்கள் கருத்துத் திணிப்புகள் என்கின்றனர். அதனால்தான் தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன. எனினும், ஊடக சுதந்திரம் என்ற கவசத்தின் பின்னே ஒளிந்துகொள்ளும் சுயநல ஊடகங்களால் இதழியல் தர்மம் சீர்குலைகிறது.
தேர்தலும் இந்துக்களின் கடமையும்
இந்த தேசத்தில் இந்துக்கள் ஏன் இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்கின்றனர் என்றால், அதற்கு அவர்களின் அரசியல் விழிப்புணர்வின்மையே காரணம். இதற்குத் தீர்வு என்ன? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் வழிகாட்டுகிறார்…
வாக்கு விற்பதற்கு அல்ல!
கொள்ளைக்காரர்களை, போதை மாஃபியாக்களைத் தேர்வு செய்யாதீர்கள். அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட ஒரு வருடத்துக்கு தினமும் 7 ரூபாய்க்குள் நீங்கள் விலை போகிறீர்கள் என்று அர்த்தம்.
கூட்டணிகளுக்குள் குத்துவெட்டு!
தேர்தலில் வெல்ல வேண்டும் என்றால், நியாயமான வாக்குறுதிகள் அளித்தால் போதாது என்ற நிலையை உருவாக்கிவிட்ட தமிழக மக்கள்தான் இதற்கு பொறுப்பாளிகள். இதுதவிர, தேர்தல்காலத்தில் வீடு தேடி வரும் பரிசுப் பொருட்களும் பண முடிப்புகளும் தான் முடிவுகளைத் தீர்மானிப்பவையாக மாறி வருகின்றன. இதுகுறித்து ஜனநாயக மதிப்பீடுகளைக் காக்க விரும்புவோர் கவலைப்பட்டே ஆக வேண்டும்.
நல்லாட்சி மலர ஒன்றிணைவோம்!
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23இல் நடைபெற உள்ளது. பாரதம் என்னும் தேசத்தின் வீட்டில் பூஜையறையாகத் திகழ்வது இந்த தமிழகம். பூஜையறையில் நம்பிக்கை இல்லாதவர்கள் இருந்தால், வழிபடுபவர்களுக்கு மனம் லயிக்காது. எனவே பூஜை ஈடுபாடு உள்ளவர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் கொண்டு வந்து விரைவில் சேர்க்கும் இயற்கை. அது நடக்கும் என நம்புகிறோம்.
தமிழகத்தில் தேர்தல் ஜூரம்
தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பிறகு, தமிழக தேர்தல் களத்தில் ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பிறகு ஒரு மாதகாலம் பிரசாரக் காலம். எனவே, வரும் நாட்களில் தொடர்ந்து அரசியல் களத்தை அலச தினுசு தினுசான வாய்ப்புகள் கிடைக்கும்.
தேசத்திற்கு வழிகாட்டும் பிகார் மக்கள்!
பிகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரிவினைவாதச் சிந்தனையுடன் கூடிய கட்சிகளின் கூட்டணியான மகா கட்பந்தனுக்கு படுதோல்வியைப் பரிசளித்த பிகார் மக்கள், நல்லாட்சி நாயகன் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையை வழங்கி, தங்கள் அறிவுத் திறனை நிரூபித்துள்ளனர்.
பிகார் தேர்தல்: சில பார்வைகள்
பிகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பலவிதமான விவாதங்கள் நடந்து வருகின்றன. அவற்றில் அபத்தமான புகார்களுக்கு பதில் அளிக்கும் சில முகநூல் கட்டுரைகள் இங்கே நன்றியுடன் மீள்பதிவாகின்றன...
தேர்தல் ஆணையம் ஆளும்கட்சியின் கருவியா?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதே சமயம், அதிமுகவும் பாஜகவும் இதை ஆதரிக்கின்றன. இது தொடர்பாக ஒரு தமிழ் நாளிதழ் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமியிடம் எடுத்த பேட்டி இங்கு மீள்பதிவாகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: சில தகவல்கள்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தற்போது தமிழகத்தில் நடந்து வருகிறது. அதுபற்றி பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பதிவு இது…