வாக்கு விற்பதற்கு அல்ல!

-கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்

உங்கள் வாக்கு விற்பதற்கு அல்ல.

கொள்ளைக்காரர்களை, போதை மாஃபியாக்களைத் தேர்வு செய்யாதீர்கள். அவர்கள் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் கூட ஒரு வருடத்துக்கு தினமும் 7 ரூபாய்க்குள் நீங்கள் விலை போகிறீர்கள் என்று அர்த்தம்.

தினமும் ஏழு ரூபாய்க்கு எவரும் உங்களை விலைக்குப் பெற முடியுமானால் அது எவ்வளவு பெரிய தன்மதிப்பிழப்பு?

மூன்று விஷயங்களை நினைவில் கொண்டு வாக்களியுங்கள்…

  1.  உங்களுக்கு பணம் தர முயல்பவன் நிரந்தரமாக உங்களை ஊனமாக்க முயல்கிறான். அவனுக்கு வாக்களிக்காதீர்கள்
  2.  இந்து மதத்தைத் தாக்குவோர், இழிவு செய்வோர், சிறுமை புரிவோருக்கு வாக்களிக்காதீர்கள்
  3.  தேசநலனே வரும் தலைமுறையினரின் நலன். குடும்ப நலனையும் ஊழலையும் நியாயப்படுத்துவோருக்கு வாக்களிக்காதீர்கள். அவர்கள் அதர்ம வாதிகள். சுயநலத்தின் பொருட்டு அன்னிய சக்திகளுக்கு பலியாகக் கூடியவர்கள் அவர்கள். அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

அவசியம் சென்று வாக்களியுங்கள். வாக்களித்தல் ஒற்றை விரல் புரட்சி. சிந்தித்து வாக்களியுங்கள்.

வாக்கை விற்றால் தன்னம்பிக்கையே உண்டாகாது. அதுவொரு அவமானம்.

$$$

Leave a comment