தென்தமிழகத்தில் புகழ் பெற்ற தலங்களிலும், இலக்கியத்தில் என்றும் நீங்கா இடம் பெற்ற தலங்களின் வரிசையில் அணி செய்யும் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ளது கரிவலம் வந்த நல்லூர் என்ற திருக்கருவையம்பதி. இத் தலம் தேவார மூவரால் பாடல் பெற்ற தலமா என்ற கேள்விக்கு தீர்க்கமான விடை தெரிய வேண்டும் என்றால், சில அடிப்படை வரலாற்றுச் செய்திகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.