பாரதியின் ‘முரசு’ பாடல்

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள மூன்றாவது கவிதை இது....

அதிகமான் நெடுமான் அஞ்சி-4

அதுமுதல் ஒளவையாருக்கு அதிகமானிடத்தில் அளவிறந்த மதிப்பும் அன்பும் பெருகின. நரை திரை மூப்பைப் போக்கும் கனியைத் தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் ஒளவையாருக்கு ஈந்த இந்த நிகழ்ச்சியைப் புலவர்கள் அறிந்து பாராட்டினார்கள். மன்னர்கள் அறிந்து மனம் நெகிழ்ந்தார்கள். தமிழுலகமே அறிந்து வியந்தது. அதிகமானை, ”அமுதம் போன்ற கனியை ஔவைக்கு ஈந்தவன்" என்று குறித்து மக்கள் புகழ்ந்தார்கள். நெல்லியைப் பற்றிய பேச்சு வரும் இடங்களிலெல்லாம் அதிகமானுடைய பேச்சும் தொடர்ந்து வந்தது. பிற்காலத்திலும் அதிகமானை உலகம் நினைவுகூர்ந்து வருகிறதற்குக் காரணம் அவனுடைய வீரம் அன்று; அவனுடைய ஆட்சித் திறமையன்று; பிற வகையான கொடைகளும் அன்று; அமிழ்து விளை தீங்கனியை ஔவையாருக்கு ஈந்த மாபெருஞ் செயலே. (கி.வா.ஜ. எழுதிய அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 4வது அத்தியாயம்)...

அழகிய போராட்டம் (பகுதி- 5)

“30 செப்டம்பர், முந்தா நாள் திங்கட்கிழமையாக இருந்ததால் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தாசில்தாரின் வருகையைக் கண்டதுமே மக்கள் தமது கடைகளையும் வீடுகளையும் மூடிக் கொண்டுவிட்டனர். நேற்றும் அரசாங்க அதிகாரிகளினால் எதுவும் செய்யமுடியவில்லை. மாலையில் நான் வண்டியில் வெளியே போனபோது சாலையில் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், தங்களுடைய நிராதரவான நிலைமை குறித்து புகார் மழை பொழிந்தனர். வரியைச் செலுத்த முடியாது என்று கூச்சலிட்டுச் சொன்னார்கள்.”... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம்- 2இன் தொடர்ச்சி)....

வள்ளுவரின் அறமும் தீனதயாளரின் தர்மமும்

பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் ’ஒருங்கிணைந்த மனிதநேயம்’ கூறுகின்ற தர்மம் குறித்த சிந்தனைகளையும், அரசு குறித்த பார்வைகளையும், அதற்கு முன்னதாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவரின் அறச் சிந்தனைகளோடு ஒப்பிட்டால், ஒரே சிந்தனைப் போக்கைக் காண முடிகிறது....இவ்விருவரும் வலியுறுத்துவது ஒன்றே. அறம் எனினும் தர்மம் எனினும் அவை எம்மக்களாலும் எம்மதத்தாலும் எல்லா நேரங்களிலும் போற்றப்பட வேண்டும். அத்தகைய அறம், தர்ம வழி நடக்கும் அரசனே, அரசே நிலைப்பேறுடையதாக இருக்கும்.... (பேரா.பூ.தர்மலிங்கத்தின் கட்டுரை)...

அழகிய போராட்டம் (பகுதி- 4)

பொதுவாக நம்பப்பட்டு வருவதற்கு மாறாக, 1784  வாக்கிலிருந்து (அதற்கு முன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்)  இந்தியா தொடர்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரிய பங்கு எதுவுமே இருக்கவில்லை.  தீர்மானங்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் ஆரம்பகட்ட செயல்திட்ட வரைவுகள் கூட 1784களுக்குப்  பின்னர் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் கமிஷனர்கள் குழுவிடம்  தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  அந்தக் குழுவானது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  ஒரு சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்தான்  அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1858  வரையிலும் அந்தக் குழுவே இந்தியா தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது. ... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் துவக்கப் பகுதியில் இருந்து)....

அதிகமான் நெடுமான் அஞ்சி-3

"உம்முடைய மன்னன் இதைக் கொடுத்து அனுப்பும்படி சொன்னானா? அவனுடைய புகழைக் கேட்டு அவனைக் கண்டு இன்புற வேண்டுமென்று நெடுந் தூரத்திலிருந்து நான் வருகிறேன். சிறிய குன்றுகளையும் பெரிய மலைகளையும் கடந்து வந்திருக்கிறேன். நான் பரிசிலைப் பெற்றுக்கொண்டு செல்வதற்காகவே வந்திருக்கிறேன் என்று என்பால் அன்பு வைத்தருளி, இதைப் பெற்றுக் கொண்டு இப்படியே போகட்டும் என்று சொல்லி அனுப்பினானே; அவன் என்னை எப்படி அறிந்திருக்கிறானோ, அறியேன். என்னைக் காணாமல் வழங்கிய இந்தப் பொருளைக் கொண்டு செல்ல நான் வாணிக நோக்கமுடைய பரிசிலன் அல்லேன். பணம் ஒன்றே குறியாக நினைத்து நான் இங்கே வரவில்லை. மனம் மகிழ்ந்து முகம் மலர்ந்து கண்டு அளவளாவி, தரம் அறிந்து கொடுத்தனுப்புவதாக இருந்தால், அவர்கள் கொடுப்பது தினையளவாக இருந்தாலும் எனக்கு இனியது" என்று பாட்டினாற் சொல்லிப் புலவர் புறப்பட்டுச் செல்வதற்காக எழுந்துவிட்டார். (கி.வா.ஜ.வின் ’அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 3வது பகுதி)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-2

அதிகமான் இளம் பருவத்திலேயே அரசாட்சியை மேற்கொண்டான். துடிதுடிப்புள்ள இளமையும் உடல் வன்மையும் உள்ளத்துறுதியும் உடையவனாக அவன் விளங்கினான். தகடூர்க் கோட்டையை விரிவுபடுத்தி மிக்க வலிமையை உடையதாக்கினான், புதிய புதிய ஊர்களைத் தன் செங்கோலாட்சிக்குள் கொண்டு வந்தான். சிறிய சிறிய நாடுகளை வைத்துக்கொண்டு வாழ்ந்திருந்த குறுநில மன்னர்கள் கொங்கு நாட்டிலும் அதற்கு அருகிலும் இருந்தார்கள். அவர்களிற் பலர் கொடுங்கோலர்களாக இருந்தார்கள். அவர்களால் மக்களுக்கு விளைந்த தீங்கை உணர்ந்த அதிகமான் அத்தகையவர்களைப் போர்செய்து அடக்கினான். இப்படி அவன் தன்னுடைய இளமைப் பருவத்தில் ஏழு பேர்களை அடக்கி, அவர் ஆண்ட இடங்களைத் தன் ஆட்சிக்கீழ்க் கொண்டுவந்தான். அவனுக்கு முன்பும் அவன் முன்னோர்கள் ஏழு பேர்களை வென்றதுண்டு. அவர்கள் ஏந்தியிருந்த ஏழு கொடிகளையும் தம் கொடிகளாகப் பிடித்துத் தாம் பெற்ற வெற்றியைக் கொண்டாடினார்கள். அதிகமான் இப்போது தன் வலிமையினால் வேறு ஏழு பேர்களை வென்றான். (அதிகமான் நெடுமான் அஞ்சி- அத்தியாயம் 2இல்)...

அழகிய போராட்டம் (பகுதி- 3)

காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டமானது முதலில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு சிலருடைய கூற்றின்படி காந்தியடிகள் அந்த அகிம்சைப் போராட்டத்தை தொரேயூ, டால்ஸ்டாய், ரஷ்கின் போன்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். வேறுசிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒத்துழையாமை இயக்கமும் சட்டமறுப்பு இயக்கமும் காந்தியடிகளின் மகத்தான சுயமான கண்டுபிடிப்பு. அவருடைய மேதமையினாலும் ஆன்மிக உயர் சிந்தனையினாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்....நவீனகால ஒத்துழையாமை இயக்கங்களில் வன்முறை வெடிக்கின்றன. அதை ஒடுக்குவதற்கு அரசும் மிகப் பெரிய வன்முறையில் ஈடுபடுகிறது. ...கலகக்காரர்களாலோ போராட்டக்காரர்களோ செய்யப்பட்ட வன்முறையைவிட அரசின் வன்முறையே மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. அழகிய போராட்டம்- பகுதி 3இல்...

பாப்பாப் பாட்டு

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் இரண்டாவதான ’பாப்பாப் பாட்டு’ கவிதை இங்கே...

அழகிய போராட்டம் (பகுதி- 2)

சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து சில காலம் நீடித்த பெருமித மயக்கங்களைத் தொடர்ந்து தன்னைத் தானே இழிவுபடுத்திக்கொள்ளும் சுய இழிவு மனப்பான்மை ஆரம்பமானது. குறிப்பாக மேற்குலகக் கல்வி பெற்றவர்கள் இந்தப் போக்கை முன்னெடுத்துச் சென்றனர். நவீனமயமாக்கம், அறிவியல் சிந்தனை என ஏதாவது ஒரு வழியில் இந்திய அடையாளங்கள், அம்சங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டினர். இந்தப் போக்கு இன்றும் முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்திய சமுதாயத்தில் அல்லது வரலாற்றில் இருந்த தவறுகள், தீமைகள் - இவற்றை நாம் மூடி மறைத்துவிட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் மாரில் அடித்துக்கொண்டு அழுதல், தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் தேச நிர்மாணத்துக்குத் தேவையான மன உறுதியை, உந்துதலை ஒருபோதும் தரப் போவதில்லை. அடிமைத்தனமாக அந்நியர்களை நகலெடுப்பதும் எந்த வகையிலும் நமக்கு உதவப் போவதில்லை....

தீராத விளையாட்டு விட்டலன்: நூல் அறிமுகம்

பாரதம் அருளாளர்களின் ஜென்மபூமி. இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு அருளாளரின் புனிதத்தலத்தை தரிசிக்க முடியும். இந்த அருளாளர்கள் அனைத்து வகுப்பினரிலும் அவதரித்திருப்பதையும் காண முடியும்; சமுதாயத்தை ஒருங்கிணைக்க இறைவனே நடத்திய திருவிளையாடல்களின் பல கதைகளை நாம் கேட்க முடியும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் மராட்டிய மண்ணில் உதித்து பக்திப்பயிர் வளர்த்த பக்தப் பரம்பரை தான்....

அதிகமான் நெடுமான் அஞ்சி-1

அமரர் திரு. கி.வா.ஜகந்நாதன் என்ற கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன், சென்ற நூற்றாண்டின் மூத்த தமிழறிஞர்களுள் ஒருவர்; தமிழ் அறிஞர், எழுத்தாளர், மேடைச் சொற்பொழிவாளர், கவிஞர், நாட்டுப்புறவியலாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகங்களை உடையவர். இவரது ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ என்னும் நூல் இங்கு கருவூலம் பகுதியில் பதிவாகிறது. கடையேழு வள்ளல்களுள் ஒருவனான அதியமான் குறித்த நூல் இது....

அழகிய போராட்டம் (பகுதி- 1)

இந்திய மூல சிந்தனையாளரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு இது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த கடைசி காந்திய சிந்தனையாளர் இவர்....ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகே பாரதத்தில் கல்வி, அறிவியல், தொழில் வளர்ச்சி சாத்தியமானது என்ற கண்மூடித்தனமான வாதங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பவை தரம்பாலின் நூல்கள். பாரதத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்த அறிவியக்கத்தை அறுத்தெறிந்ததே ஆங்கிலேயரின் சாதனை என்பது தரம்பாலின் ஆய்வு முடிவு.... இங்கு தொடராக வெளியாக உள்ள  ‘அழகிய போராட்டம்’, இதுவரை தமிழில் வெளிவராத நூல். தரம்பாலின் Civil Disobedience and Indian Tradition (1971) நூலே இங்கு திரு. பி.ஆர்.மகாதேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -4

அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மன்னர்க்கிடையே மாறுபாடு நிகழ்ந்தால் அப் பிணக்கத்தைத் தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு. தூதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத்தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம். பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பிணக்கம் நேர்ந்த பொழுது பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கண்ணன். அப் பெருமான் தூது நடந்த செம்மையை சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் தூதனாகிய கண்ணனைப் போன்று இராம தூதனாயினான் அனுமன். நிறைந்த பேரன்பும், சிறந்த கலைஞானமும் நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான்.... ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் விருந்து- நூலின் நான்காம் (இறுதி) பகுதி....

புதிய ஆத்திசூடி

மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப்பாடல்கள் பிரிவில் முதலாவது கவிதை ‘புதிய ஆத்திசூடி’ இங்கே...