அந்தமான் சிறை அனுபவங்கள் – நூல் அறிமுகம்

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).... பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.... தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது..... அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.

பாரதியின் வசன கவிதை – 5

தமிழ் இலக்கிய வரலாற்றில் புத்திளமை வாய்ந்த புதுக்கவிதைகளுக்குத் தோற்றுவாய் ஆனவர் மகாகவி பாரதி. அவரது வசன கவிதைகளே தற்போதைய புதுக்கவிதைகளுக்கு கங்கோத்ரி. ”சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை எந்நாளும் அழியாத மகாகவிதை” என்று கவிதைக்கு இலக்கணம் வகுத்த பாரதியின் புதிய வழித்தடம் இந்த வசன கவிதை. அவர் எழுதிய 6 பெரும் வசன கவிதைகள் இங்கு தொடராக வெளியாகின்றன. அவரது ஐந்தாவது வசன கவிதையான ‘ஜகத் சித்திரம்’ இங்கு ஐந்தாவது பகுதியாக மலர்கிறது...