சந்திரிகையின் கதை – பாரதி

மகாகவி பாரதியின் இறுதிப் படைப்பு ‘சந்திரிகையின் கதை’.  ஆனால், இது முற்றுப்பெறுவதற்கு முன்னமே, பாரதியின் வாழ்வு முற்று பெற்றுவிட்டது. அதன் காரணமாக, தமிழ் மொழி ஓர் அற்புதமான இலக்கியத்தை இழந்துவிட்டது. சுதேசமித்திரன் வார இதழில் தொடராக வந்த இந்தப் புதினம், அவரது அகால மறைவால் முற்றுப் பெறாமல் போய்விட்டது. எனினும், மகாகவி பாரதியின் பன்முக தரிசனத்துக்கு அவரது முற்றுப் பெறாத இந்த இறுதிப் படைப்பு ஒளிவீசும் மகுடமாகத் திகழ்கிறது. தனது தத்துவ விசார நாட்டம், நையாண்டி செய்யும் நளினம், நகைச்சுவை உணர்வு, இலக்கியப் பரிச்சயம், மனிதநேய சிந்தனைகள் ஆகியவற்றின் கதம்பமாக இதனைப் படைத்திருக்கிறார் பாரதி.