இந்திய மூல சிந்தனையாளரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு இது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த கடைசி காந்திய சிந்தனையாளர் இவர்....ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகே பாரதத்தில் கல்வி, அறிவியல், தொழில் வளர்ச்சி சாத்தியமானது என்ற கண்மூடித்தனமான வாதங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பவை தரம்பாலின் நூல்கள். பாரதத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்த அறிவியக்கத்தை அறுத்தெறிந்ததே ஆங்கிலேயரின் சாதனை என்பது தரம்பாலின் ஆய்வு முடிவு.... இங்கு தொடராக வெளியாக உள்ள ‘அழகிய போராட்டம்’, இதுவரை தமிழில் வெளிவராத நூல். தரம்பாலின் Civil Disobedience and Indian Tradition (1971) நூலே இங்கு திரு. பி.ஆர்.மகாதேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
Day: March 27, 2022
ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -4
அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மன்னர்க்கிடையே மாறுபாடு நிகழ்ந்தால் அப் பிணக்கத்தைத் தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு. தூதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத்தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம். பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பிணக்கம் நேர்ந்த பொழுது பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கண்ணன். அப் பெருமான் தூது நடந்த செம்மையை சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் தூதனாகிய கண்ணனைப் போன்று இராம தூதனாயினான் அனுமன். நிறைந்த பேரன்பும், சிறந்த கலைஞானமும் நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான்.... ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் விருந்து- நூலின் நான்காம் (இறுதி) பகுதி....
புதிய ஆத்திசூடி
மகாகவி பாரதியின் கவிதைகளில், பல்வகைப்பாடல்கள் பிரிவில் முதலாவது கவிதை ‘புதிய ஆத்திசூடி’ இங்கே...