அரசே அராஜகத்தில் ஈடுபடும்போது பெரும்பாலோர் ஊமையாகி விடுகின்றனர். ஆனால், விதிவிலக்குகளாக அமைந்த தளகர்த்தர்கள் ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகம் நடத்தியதுடன், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரான, இந்து முன்னணியின் நிறுவனர், அமரர் இராம.கோபாலன், மிகுந்த பொறுப்புணர்வுடனும், அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது....
Day: March 25, 2022
பாரதியின் விநாயகர் நான்மணி மாலை
மகாகவி பாரதியின் கவிதைகளில் இரண்டாவது பிரிவான பக்திப் பாடல்களில் முதல் கவிதை ‘விநாயகர் நான்மணி மாலை’. பவளம், முத்து, பச்சை, நீலம் ஆகிய நான்கு மணிகளைக் கோர்த்து ஒரு மாலையாக்கினால் எவ்வாறு இருக்குமோ அதுபோல, வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் ஆகிய நான்கு யாப்புக் கவிதைகள் ஒழுங்காக அமைத்து பாடப்பெறுவது நான்மணி மாலை. மகாகவி பாரதியின் இலக்கணப் புலமைக்கும், யாப்பிலக்கணத் தேர்ச்சிக்கும் அடையாளமாக விளங்குபவை இக்கவிதைகள். அது மட்டுமல்ல, இறைவனை வேண்டும்போதும், நாட்டுநலனுக்காகத் துடிக்கும் அவரது தேசப்பற்றை இப்பாடலில் நாம் காணலாம்....
ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’: பகுதி -2
...கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள்; கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்றதன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான். ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம்- இரண்டாவது பகுதி....