-காலச்சக்கரம் நரசிம்மா
மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு. காலச்சக்கரம் நரசிம்மா, முகநூலில் உதவாக்கரைநிதிக்கு அற்புதமான பாடம் எடுத்திருக்கிறார். முட்டாள்கள் திருந்துவது துர்லபம். அழிய வேண்டியவர்களால் எவ்வாறு திருந்த முடியும்? இருப்பினும், திரு. காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் இந்த அறிவுரையை கழக உடன்பிறப்புகள் படித்து தங்களுடைய இளவரசரிடம் கொண்டு சேர்க்கட்டும் என்ற எண்ணத்தில் மீள்பதிவு செய்கிறோம்.

திரு உதயநிதி அவர்களே! தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதலாக நீங்கள் ஆத்திரத்தின் உச்சத்தில் இருப்பதாகத் தெரிகிறது… உங்கள் கோபத்தில் , —தவழ்ந்து முதல்வர் ஆன எடப்பாடி என்று — நீங்கள் நையாண்டி செய்தவரையே , முதல்வர் ஆக்க சித்தமாக இருந்தீர்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள், உங்கள் கோபத்தின் தீவிரத்தை…
உங்கள் முகபாவம் உங்களது சினத்தை வெளிப்படுத்துகிறது. மிகவும் கொடுமையான காலகட்டம் தான்.
மனதைக் கலங்கடிக்கும் கட்டம்.
எந்த நாற்காலி உங்களை முதல்வராக அமர்த்துவதற்குத் தயாராகக் காத்திருந்ததோ —
2026 முடிவுகள் வந்த பிறகு, எந்த நாற்காலியில் அமர்ந்து நீங்கள் அரசராக முடிசூட இருந்தீர்களோ–
அந்த நாற்காலியில் சற்றும் எதிர்பாராத விதமாக, உங்கள் கல்லூரி நண்பரே திடுப்பென்று வந்து அமருவதை மனம் ஏற்காது தான். ஜீரணிக்க இயலாத ஒரு திருப்பம்தான்.
விஜய் மீது உங்கள் கோபத்தைக் காட்ட இயலாமல், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல சனாதனத்தைப் பிறாண்டி, அதன் மீது வன்மத்தைப் பொழிந்திருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது .
அண்ணாவுக்குப் பிறகு முதல்வர் நாற்காலியில் அமர இருந்த நெடுஞ்செழியன் அவர்களைப் புறம் தள்ளி, உங்கள் பாட்டனார் முதல்வராக பதவி ஏற்ற போது நெடுஞ்செழியனும் இதே மனநிலையில் தான் இருந்தார்…
நடிகை ஜெயலலிதாவுக்கு கலைமாமணி விருதை அளித்த நெடுஞ்செழியன், பின்னாளில் அதே ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்ற போதும், அவர் இந்த மனநிலையில் தான இருந்தார்…
அத்வானி பிரதமர் பதவியில் அமர்வதற்கு தயார் ஆகி கொண்டிருக்க, திடீரென்று மோடியை ஆர்எஸ்எஸ் பதவியில் அமர்த்தியபோது, அவரும் இதே மனநிலையில் தான் இருந்தார்…
எம்ஜிஆருக்குப் பிறகு ஆர்.எம்.வீரப்பன் முதல்வர் பதவியில் அமர்வதற்காக தயார் ஆகி கொண்டிருக்க, வி.என். ஜானகி பதவியில் அமர்ந்ததும் அவரும் அதே மனநிலையில் தான் இருந்தார்…
ஆங்கிலத்தில் சொல்வார்கள்– Holding on to anger is like grasping a hot coal with the intent of throwing it at someone else; in the end, you are the one who gets burnt!
சனாதனத்தை வேரறுப்போம் என்று காலங்காலமாகச் சொல்லி வந்திருக்கிறீர்கள்.
நியாயமாகப் பார்த்தால், அரசியலில் சனாதனத்தை அதிகம் கலப்பது உங்கள் குடும்பம்தான் .
‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ’ என்று சனாதனம் எங்குமே சொன்னதில்லை. ஆனால் பதவியில் நீடிப்பதற்காக, ஒட்டகத்திற்கு கல்யாணம் செய்வது, 108 சுமங்கலிகளுக்கு பூஜை செய்வது, கொடைக்கானலில் யாகங்கள் செய்வது, உங்கள் மாமா சபரீசன் திருச்செந்தூர் கோவிலில் சத்ரு சம்ஹாரம் யாகம் செய்வது என்று, பூஜை புனஸ்காரங்களை அதிகம் செய்வது, உங்கள் குடும்பம்தான்.
நியாயமாக பாலாஜி ஹாசன் தான் சிறப்பு அரசு அதிகாரியாக பதவி ஏற்று இருக்க வேண்டும். அதற்கு பதில் ராதான் பண்டிட் க்கு அந்தப் பதவி கிடைத்தது.
உங்களுக்கு அருமையான தாயார் கிடைத்திருக்கிறார். கணவனும் மகனும் வாழ வேண்டும் என்பதற்காக, சனாதனத்தை இறுகப் பற்றி இருக்கிறார் .
ஆனால் மந்திரங்கள், பூசைகள், யாகங்கள் செய்துதான் இறைவனிடம் வரம் கேட்க வேண்டும் என்கிற தேவை சனாதனத்தில் இல்லை .
பூசும் சாந்து என் நெஞ்சமே - புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே வான் பட்டு ஆடையும் அஃதே தேசமான அணிகலனும் என் கைகூப்பு செய்கையே!
-என்று தான் சனாதனம் சொல்கிறது.
முழு நம்பிக்கையுடன், நல்லெண்ணத்துடன், ”என் கணவர் மற்றும் மகன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்’ என்று வேண்டாமல், இந்த முறையாவது ‘என் கணவரும் மகனும் ஆட்சிக்கு வந்து, பொறுப்புடன் நல்லாட்சி நடத்த வேண்டும்’ என்று வேண்டி இருந்தால், நிச்சயம் அவரது பிரார்த்தனை ஈடேறி இருக்கும். நல்லெண்ணம் இருந்தாலே போதும், கேட்பது கிடைத்துவிடும் .
தனம் என்றால் உங்களுக்குத் தெரியும். சனாதனம் என்றால் மதம் அல்ல – இறைவனின் கொடை என்று பொருள். சன் மார்க்கம் என்றால் இறைவனை அடையும் மார்க்கம் என்று பொருள்.
கிறித்துவர்கள், இஸ்லாமியர்கள் கூட சனாதனிகள் தான். அவர்களின் கடவுள் வேறு என்றாலும், அவரவர் கடவுள்களிடம் கொடை, அருள் பெறுகிறவர்கள் சனாதனிகள்.
உங்கள் பிரச்சினை என்ன தெரியுமா? தாத்தா செய்த அரசியலை எல்லாம் நாமும் செய்தால், முதல்வர் ஆகி விடலாம் என்று எண்ணுகிறீர்கள்!
உளுத்துப் போன சித்தாந்தத்தை எல்லாம் இப்போது பேசி மக்களை மயக்க நினைக்கிறீர்கள். இந்தக் காலத் தலைமுறைக்கு அதெல்லாம் காமெடி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை.
பல்வேறு இனம், மதம், மொழியைக் கடந்து இப்போது living together, get Together, socialising, Rave parties, pub parties என்று மக்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. அவர்களுக்கு சனாதனம் என்றாலே என்ன என்று தெரியாது. நீங்கள் சனாதனம் பற்றிப் பேசினால், Son தன்னுடைய தனத்தைப் பற்றி பேசுகிறார் என்றுதான் நினைப்பார்கள்.
கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்ததைப் பற்றி மெட்ரோ ரயில் காலத்தில் பேசி பயன் இல்லை. அந்தக் கால நீராவி இன்ஜின் ரயில்கள் வேண்டுமானால் அரசியலுக்கு உதவி இருக்கலாம். இந்தக் காலததில் ரயில்கள் நிலத்தின் அடியிலும், கடலின் அடியிலும், விண்ணிலும் பறக்கின்றன. எனவே , தண்டவாளத்தில் தலை வைத்த கதை எல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது.
விஜய் ‘எல்லோருக்கும் நான் தலைவர்’ என்று பேசியதால், கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் ஆட்சிக்கு வந்திருக்கிறார்; சனாதனத்தைச் சேர்ந்த ஒருவரை கல்வி அமைச்சர் ஆக நியமித்து இருக்கிறார் .
எல்லோருக்கும் பொதுவானவன் என்று விஜய் தன்னைக் காட்டிக்கொண்டதால் தான் சனாதனிகள் வாழும் ஸ்ரீரங்கத்திலேயே தவெக வெற்றி பெற்று உள்ளது. சனாதனிகள் கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் விஜய்யை தங்கள் முதல்வராகத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதுதான் மக்களின் நம்பிக்கை.
சனாதனம் மக்களைப் பிரிக்கிறது என்றால், சனாதனிகள் ஒரு கிறித்துவரை தங்கள் முதல்வராக தேர்ந்தெடுத்து இருப்பார்களா?
இன்னும் ‘அவனை ஒழிப்பேன் , இவனை ஒழிப்பேன், இந்தியை ஒழிப்பேன், நீட்டை ஒழிப்பேன்’ என்று பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை .
Be a constructive Leader of the Opposition.
சனாதனத்தை எதிர்த்த உங்கள் பாட்டனார், கடைசியில், ‘ராமானுஜர் வரலாற்றை எழுதுகிறேன்’ என்று காலத்தை கழித்தார்.
சனாதனத்தை ஒழிப்போம் என்று நீங்கள் சொல்ல, ‘யார் என்னை ஒழிக்க நினைப்பது?’ என்று சனாதனம் உங்களிடம் கேட்பதற்கு முன்பே நம் காலம் முடிந்துவிடும். அகிலாண்ட கோடி பிரம்மாண்டத்தை அளக்க நினைக்காமல், அடுத்த ஐந்து வருடங்களை மட்டும் அளக்க நினையுங்கள்.
‘திமுக சீனியர் கட்சி’ என்று பேசி இருக்கிறீர்கள். திமுக சீனியாரிட்டிப் படி செயல்பட்டு இருந்தால், உங்கள் பாட்டனார் முதல்வர் ஆகி இருக்க முடியாது. நெடுஞ்செழியன் குடும்பம்தான் இப்போது திமுகவின் தலைமையில் அமர்ந்திருக்கும்.
மக்கள் சீனியாரிட்டி பார்ப்பதில்லை. நல்லெண்ணத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.
எல்லோருக்கும் தலைவனாக, எல்லோருக்கும் பாதுகாவலனாகத் திகழ்ந்து உங்கள் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வழியைப் பாருங்கள் .
வாழ்த்துகள்.
- நன்றி: திரு. காலச்சக்கர நரசிம்மா அவர்களின் முகநூல் பதிவு.
$$$