"தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து தனி நபர்கள், கட்சியினரிடையே கருத்து வேறுபாடு இருக்கலாம். அதில் தவறில்லை. அந்த வேறுபாடுகள் சுயநலம் இல்லாமலும் தேசத்தின் நன்மையையும் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அதுவே நாட்டிற்கு லாபகரமானது, நன்மை செய்யக் கூடியது. ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகு எந்த வேறுபாடாக இருந்தாலும் அது வாக்குப் பெட்டியின் வழியாக தான் வெளிப்பட வேண்டும். இதற்கான பொறுப்பு கட்சிகளிடமும் மக்களிடமும் மட்டுமே இருக்கிறது."