பாரதியை வடிவமைத்த காசி

பாரதியின் காசி வாசம் மொத்தம் ஐந்தே ஆண்டுகள் தான், 1898 முதல் 1903 வரை. ஆயினும், அவரது வாழ்க்கைப் பாதையையே காசி தான் நிர்ணயித்தது என்றால் மிகையில்லை. தனது 16 முதல் 21 வயது வரையிலான காசி வாசத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களும், திறப்புகளும், தரிசனங்களுமே எட்டையபுரத்தில் ‘இளசைச் சுப்பிரமணியன்’ என்று சம்பிரதாயமாக தமிழ்ப் பண்டித நடையில் கவிதை எழுதிக் கொண்டிருந்த சுப்பையாவை, மகத்தான இலட்சியங்களும், தேசிய உணர்வும், சுதந்திர சிந்தனைகளும் கொண்ட சுப்பிரமணிய பாரதி என்ற நவீனத் தமிழ்க் கவிஞராகவும், எழுத்தாளராகவும், படைப்பாளியாகவும் மாற்றின....

சத்திய சோதனை- 5(21-25)

சத்தியாக்கிரகத்தின் முடிவில் சத்தியாக்கிரகிகள் மேலும் பலமுள்ளவர்களாகவும், ஆரம்பத்தில் இருந்ததைவிட அதிக உற்சாகமுள்ளவர்களாகவும் இருக்க முடிந்தால்தான் சத்தியாக்கிரகப் போராட்டம் பயனுள்ளதாயிற்று என்று சொல்ல முடியும்....

பாஞ்சாலி சபதம் – 1.1.18

அஸ்தினாபுர அமைச்சர் விதுரனும் தங்கள் சித்தப்பனுமான விதுரனை சகல மரியாதையுடன் வரவேற்கின்றனர் பாண்டவர்கள். மூன்று பாடல்களில் இதனை விவரிக்கிறார் மகாகவி பாரதி...

அவரா சொன்னார்?

அமரர் பேராசிரியர் ஸ்ரீ. சோ.சத்தியசீலன், ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர்; கம்பனில் ஆழ்ந்தவர்; தமிழகம் மட்டுமல்லாது, உலகமெங்கும் சென்று பட்டிமண்டபங்களில் தமிழ் வளர்த்தவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே...

ஹரிஜன்: பெயரில் என்ன இருக்கிறது?

அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்;  மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். ‘ஹரிஜன்’ என்ற சொல் பிறந்ததன் வரலாறு குறித்த அவரது கட்டுரை இங்கே….

ஸ்வதந்திர கர்ஜனை- 2(9)

நம்மில் பலர் ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’ என்று ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்வதையும், பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கரை  ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியோடு குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறோம். இல்லையா? அந்த வைக்கம் சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று  தெரியவில்லை. ஆர்வம் உள்ளவர்களுக்காக அந்த சத்தியாக்கிரக நிகழ்ச்சி பற்றி சிறிது இப்போது பார்க்கலாம்....

காவி கட்டிய கண்ணியம்

பேராசிரியர் ஸ்ரீ முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்; ராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், வைணவ பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே...

பாஞ்சாலி சபதம் – 1.1.17

பாண்டவரை சூதுக்கழைக்கச் செல்லும் அமைச்சர் விதுரன், போகும் வழியில் பாண்டவர் நாட்டின் வளமையைக் கண்டு வியக்கிறார். இத்துணை சிறப்பு மிக்க நாட்டிற்கு தீது இழைக்கதானும் ஒரு கருவியாகி விட்டேனே என்று மனம் வருந்துகிறார் இப்பாடலில்...

விவேகானந்தரும் அரவிந்தரும் அருளிய மறுமலர்ச்சி

திருமதி பிரேமா நந்தகுமார் (83), நாடறிந்த பேச்சாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். நமது தலத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இரண்டாவது கட்டுரை இது….

பாஞ்சாலி சபதம் – 1.1.16

பாண்டவர்கள் - கௌரவர்களின் பொதுவான உறவு என்று சொன்னால் அவர் சித்தப்பா விதுரன் தான். அவர் அஸ்தினாபுர அரசின் அமைச்சரும் கூட. அவரையே பாண்டவரை அஸ்தினாபுரம் அழைத்து வருமாறு தூது விடுகிறார் மன்னர்; பாண்டவர்களிடம், துரியனின் தீய உள்நோக்கத்தைப் புலப்படுத்துமாறும் கூறி அனுப்புகிறார். அதன்பின் சோர்வடைந்து வீழ்கிறார். புத்திர பாசத்தால் மயங்கினாலும் நியாய உணர்வுடன் தவிக்கும் மன்னரை மகாகவி பாரதி தனது பாடலில் படம் பிடிக்கிறார்.