காங்கிரஸின் பெயரால் எதையும் செய்ய வேண்டாம் என்று என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்து விட்டேன். நாங்கள் விரும்பியதெல்லாம், வேலையையேயன்றிப் பெயரையல்ல; பொருளையேயல்லாமல் நிழலையல்ல. ஏனெனில், அரசாங்கத்திற்கும், அந்த அரசாங்கத்தை இஷ்டம்போல் ஆட்டி வந்தவர்களான தோட்ட முதலாளிகளுக்கும், காங்கிரஸ் என்ற பெயரே வேப்பங்காயாக, வெறுப்பாக இருந்தது. ...
Day: November 13, 2022
சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 8
சைவம் தனது நெறியில் ஓங்கி இருக்கும் வேளையில் வைணவம் அடக்கி வாசிப்பதும், மாறாக வைணவம் ஓங்கியிருக்கும் வேளையில் சைவம் அடங்கியிருப்பதும் சகஜம். ஆட்சியாளர்கள் இதற்குள் தலையைக் கொடுக்காமல் போனால் விபரீதம் எதுவும் நிகழாது. மாறாக மன்னனுக்கு மதமேறிவிட்டால் அவ்வளவுதான், மாற்று சமயத்தினரின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
காந்தாமணி
காதலின் புகழ் குறித்து தனிக் கவிதைகளே (பாரதி அறுபத்தாறு- 49-53) எழுதியவர் மகாகவி பாரதி. காதல் என்பது கண்ணுக்குத் தெரியாத கடவுளின் அருள் என்பதே அவரது பார்வை. வயது, மதம், மொழி, பிரதேச வேறுபாடுகள் காதலுக்கு ஒருபொருட்டாக மாட்டாது என்பதை இக்கதையிலும் வெளிப்படுத்தி இருக்கிறார் பாரதி, தனக்கே உரித்தான குறும்பான மொழிநடையில்…
எனது முற்றத்தில் – 29
தேசத்தின் கலாச்சார பாரம்பரிய அடிப்படையில் மொழிகளிடையே சுமுக உறவு ஏற்படுத்தி,கழகங்கள் உருவாக்கி வைத்திருக்கிற மொழித் துவேஷத்தை துடைத்து அழிப்பதற்கு முயற்சி தொடங்கிவிட்டது. விளையாட்டு, பாட்டு, பழமொழி, கதை, உரையாடல் என்று நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியிலிருந்து உதயமாகி வியாபிப்பது நல்ல அறிகுறி.
பாஞ்சாலி சபதம் -1.1.4
காப்பிய இலக்கணப்படி, ஹஸ்தினாபுர மன்னனை மகாகவி பாரதி அறிமுகம் செய்கிறார் இந்தப் பகுதியில்... துரியோதனன் இக்காப்பியத்தின் எதிர்நாயகன் ஆயினும் அவனது வல்லமையை எடுத்தியம்புகிறார் கவி.