கொன்றைவேந்தன் (81-85)

திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(4)

காங்கிரஸ் மெல்லத் தன் வழியிலிருந்து மாறி தீவிர அரசியல் இயக்கமாக மாறி வரும் சூழ்நிலையை ஹியூம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தான் எந்தப் பின்னணியில் என்ன காரணத்துக்காக காங்கிரசைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் திசைமாறி இப்போது இந்திய சுதந்திரம் எனும் கோஷத்துடன் புத்துணர்வு பெற்று பயணிப்பதை அவர் புரிந்துகொண்டு தன் வேலை இங்கு முடிந்துவிட்டது என்று மூட்டை முடிச்சுக்களுடன் இங்கிலாந்துக்குப் பயணமானார்....

விடுதலை

சேர்க்கப்படுவது செல்வம். மனிதனுக்கு இன்பம் தரும் பண்டங்களையும் அவற்றைக் கொள்வதற்கு நல்ல கருவியாகிய பொன்னையும் சேகரித்து வைக்க வேண்டும். இடைவிடாமல் சேர்க்க வேண்டும். கை பற்றின படியாகவே இருக்க வேண்டும். ஆனால் தீயகாரியம் செய்து, கெட்ட தொழில் செய்து சேர்த்த செல்வம் நிற்காது. செல்வம் சேர்த்த பிறகு அதன் உரத்தால் பிறர்க்குத் தீங்கு செய்வாரும் விரைவிலே கெடுவார்.