ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.
Day: November 3, 2022
சுவாமி விவேகானந்தர்: காந்திஜியின் முன்னோடி
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்; மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே….
உள்ளிருத்த விளக்கம்
அன்னம் அமிர்தம். வைஷ்ணவர், ‘போஜனமாயிற்றா?’ என்பதற்கு ‘அமுது செய்தாயிற்றா??’ என்கிறார்கள். அன்னம் அமிர்தமென்பதே ராமானுஜருடைய சித்தாந்தம். உண்மையை நேர்மையாலே காக்க வேண்டும். ஆதலால் அன்னத்தைக் காப்பாற்றத் தெரியாதவன் மூடன்.