இவ்வாறு ஸ்ரீரங்கத்தில் தம் தொண்டர்களுடன் குழுமியிருந்தபோது ஒருநாள் யதிராஜர் அசையாமல் மோனத்தில் ஆழ்ந்திருந்தார். கூடியிருந்த தொண்டர் குழாம் காரணம் கேட்க ராமானுஜர் “ஸ்ரீபெரும்புதூரில் என் அன்பர்கள் என் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்து அதற்கு கண்மலர் திறந்துகொண்டிருக்கிறார்கள். நான் அந்தச் சிலையில் எழுந்தருளிவிட்டு வந்தேன்” என்றாராம். அதைக் கேட்டு பக்தர்களின் கண்களில் ஆனதைக் கண்ணீர் பெருகியது. தனது அந்திமக்காலம் நெருங்கிவிட்டதை ராமானுஜர் குறிப்பால் உணர்த்தினார்.
Day: November 16, 2022
மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே!
அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி...
பாஞ்சாலி சபதம்- 1.1.7
இளையவர் வழிதவறுகையில் அவர்களை அறிவுறுத்தி வழிநடத்துவதே பெரியோரின் இயல்பு. மாறாக, பொறாமைத் தீயில் வேகும் மருகன் துரியோதனனை மேலும் வீழ்ச்சி அடையச் செய்யும் வகையில் சூதாட்ட உபாயம் கூறுகிறான் தாய்மாமன் சகுனி. அதனை ‘நல்ல இங்கிதம்’ என்று கூறி கட்டித் தழுவுகிறான் துரியோதனன். தீயோர் சொல் முதலில் இனிக்கும்; பின்னர் கசக்கும் என்பது தானே உலக வழக்கம்?