காஞ்சிபுரத்தில் தொடங்கிய திக்விஜயம் திருக்குடந்தை, மதுரை, அழகர்கோவில், திருக்குறுங்குடி வழியாக நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார்த்திருநகரி சென்றடைகிறது. ராமானுஜரும் நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து கேரளதேசம் சென்று அங்கு திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாபனை சேவித்துவிட்டு வடக்கே தனது யாத்திரையை மேற்கொள்கிறார்.
Day: November 12, 2022
ஸ்வதந்திர கர்ஜனை- 2(7)
அந்த மாநாடு தொடங்கும் வரை காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பலத்த எதிர்ப்பு தெரிவித்த சி.ஆர்.தாசும், லாலா லஜபதி ராயும், மாநாடு தொடங்கியதும் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து முன்மொழியவும், வழிமொழியவும் ஒப்புக் கொண்டார்கள். இந்த மாநாட்டில் காந்திஜிக்கு பலத்த ஆதரவு காணப்பட்டது.
பாஞ்சாலி சபதம் – 1.1.3
குருவம்சம் ஆண்ட ஹஸ்தினாபுரத்தின் சிறப்பை வர்ணிக்கும் பாடல்களுடன் பாஞ்சாலி சபதத்தைத் தொடங்குகிறார் மகாகவி பாரதி. காப்பிய இலக்கணத்தின்படி, ஊர்ச் சிறப்புடன் தொடங்குதல் மரபு.