ராமானுஜர் தனது இளம் பருவத்திலேயே திருக்கச்சி நம்பி, பெரியநம்பி போன்றோர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் எம்பெருமானின் புகழ் பாடும் காரணத்தால் அவர்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு அவர்களை வணங்குதல், சேர்ந்து உண்ணுதல், இல்லத்தில் அனுமதித்தல் போன்ற செயல்களை ஊர் எதிர்த்தாலும் செய்து வந்தார்.
Day: November 14, 2022
மகாவித்துவான் சரித்திரம்- 2(6ஆ)
நல்ல திறமையுள்ள விகடகவியொருவர் அப்பொழுது பல வகைப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்களைப் பேசி யாவரையும் சிரிக்கும்படி செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்திருந்த வேதநாயகம் பிள்ளை இப்புலவர்கோமானை நோக்கி, "விகடகவிகள் வித்துவான்களுக்கு நேர் விரோதிகள்; வித்துவான்கள் இழிந்தவற்றையும் உயர்ந்தனவாகக் கூறுபவர்கள்; விகடகவிகள் உயர்ந்தவற்றை இழிந்தனவாக நினைக்கும்படி பேசுபவர்கள்" என்றார். புத்திமான்கள் பேசும் எந்தப் பேச்சும் நயமாக இருக்குமென்பதை அவருடைய வார்த்தை புலப்படுத்தியது.
பாஞ்சாலி சபதம் – 1.1.5
ராஜசூய யாகம் நடத்தி தன்னை நாட்டின் சக்கரவர்த்தியாக அறிவித்துக் கொண்ட யுதிஷ்டிரனுக்கு பாரதம் முழுவதும் ஆண்ட முடியுடை வேந்தர்கள் செய்த மரியாதை, அவனது தாயாதியான துரியோதனனுக்குப் பொறுக்கவில்லை. அஸ்தினாபுரத்திலிருந்து துரத்தினாலும், தனிநகரை அமைத்து ஆளும் பாண்டவர்களின் திறனைக் கண்டு வயிறெரிகிறான் துரியன். அவனது புலம்பலை கவிதையாக்கி, ‘பாஞ்சாலி சபதம்’ காப்பியத்துக்கு வித்திடுகிறார் மகாகவி பாரதி.