தன்னுடைய துவைதக் கோட்பாடுகளை தனியாக ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற பெயருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபிப்பதற்கு யாதவப்பிரகாசர் ஒரு கருவியாக இருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படி ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் தனது உயிரைப் பணயம் வைக்க நேர்கிறது. இந்த உயிர்ப் பணயம் இவரது வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது.....
Day: November 9, 2022
பாஞ்சாலி சபதம் – முகவுரை
பழம்பெரும் இதிகாசமான மகாபாரதத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, பெண்ணுரிமைக் காப்பியமாக தமிழில் சுப்பிரமணிய பாரதி வடித்துத் தந்ததே ‘பாஞ்சாலி சபதம்’. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தைப் பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த அற்புதமான படைப்பு இது. இலக்கிய நயமும் கவிநயமும் கொண்ட இனிய கவிதைகளால் அமைந்த காப்பியம் இது. ‘பாஞ்சாலி சபதம்’ இரு பாகங்கள் கொண்டது. இந்நூலில் முதல் பாகத்தில் - சூழ்ச்சி சருக்கம், சூதாட்டச் சருக்கம், இரண்டாம் பாகத்தில் அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களில் 412 பாடல்கள் உள்ளன. இந்நூல் நமது தளத்தில் தொடராக வெளியாகிறது...