"உலகெலாம்" என்ற செய்யுளுக்கு அந்த உரையாசிரியர் எங்ஙனம் பொருள் செய்திருக்கிறாரென்பதை அறிவதற்கு அதனுரையைப் படிப்பித்து இவர் கேட்டார். அச்செய்யுளின் நயத்தை அவ்வுரை நன்கு புலப்படுத்தவில்லை. 'மலர் சிலம்படி' என்பதற்கு இலக்கணப் பிழையாக மலர் போன்ற சிலம்படியென்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதனை யறிந்து இவர் மனவருத்தமடைந்து, "மலர் சிலம்படி யென்றது வினைத்தொகை; அதற்கு மலர்ந்த சிலம்படி யென்பதுதான் பொருள். மலர்போன்ற சிலம்படியென்று பொருள் கொள்ள வேண்டுமானால், மலர்ச்சிலம்படி யென் றிருத்தல் வேண்டும். அப்படியிருத்தல் இங்கே பொருந்தாது" என்றார்; உலகெலாம் மலர் சிலம்படியென இயைக்க வேண்டுமென்றும் இப்பொருளுக்கு மேற்கோள் திருவாசகத்திலுள்ள, "தில்லை மூதூ ராடிய சேவடி, பல்லுயி ரெல்லாம் பயின்றன னாக" என்பதென்றும் எங்களுக்குச் சொன்னார்.
Day: November 23, 2022
சுவாமி விவேகானந்தர் கண்ட ஸ்ரீ இராமானுஜர்
பாரதியியல் ஆய்வாளர், அரவிந்த இலக்கிய ஆய்வாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர் எனப் பன்முகங்களை உடையவர், பேராசிரியர் திருமதி பிரேமா நந்தகுமார் (83). ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். சுவாமி விவேகானந்தரை ஸ்ரீராமானுஜருடன் ஒப்பிடும் இவரது இனிய கட்டுரை இங்கே...
பாஞ்சாலி சபதம் – 1.1.14
அறிவுரை கேளாச் செவியனான தனது மைந்தனின் அடத்தைக் கண்டு வெறுத்துப்போன்ன மன்னர் திருதராஷ்டிரன், எதிர்காலத் தீமையை எண்ணி நானினாலும், வேறு வழியின்றி பாண்டவரை சூதுக்கு அழைக்க உடன்படுகிறார். இதனை விரித்துச் சொல்ல ஆர்வமின்றி, இரண்டே பாடல்களில் முடித்து விடுகிறார் மகாகவி பாரதி...