மௌன நிலையே ஞானத்தின் உச்சம் என்று போதிக்கிறார் ஔவையார். மோனம் என்பது மௌனம் ஆகும். இது பேசாப் பெருநிலை. அமைதியை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதையும் குறிக்கிறது.
Day: November 1, 2022
மகாவித்துவான் சரித்திரம்- 2(4ஆ)
ஒவ்வொரு தினத்தும் இரவில் பிள்ளையவர்கள் போய் உண்பதற்கு அமர்ந்தவுடன் நான் புத்தகமுங் கையுமாகச் சென்று பிள்ளையவர்கள் பக்கத்திலிருந்து படிக்க வேண்டியவற்றைப் படித்துப் பொருள் கேட்க வேண்டுமென்பது ஆறுமுகத்தா பிள்ளையின் கருத்து. எந்தக் காலத்தும் இவர் தடையின்றிப் பாடஞ் சொல்லுவார். என்றைக்கேனும் தூக்கத்தால் அங்ஙனம் செய்வதற்குத் தவறிவிட்டால் அன்று ஆகாரம் செய்துகொண்ட பிறகாவது மறுநாட் காலையிலாவது ஆறுமுகத்தா பிள்ளை என்னைக் கோபித்துக் கொள்வார்....
ப்ராயச்சித்தம்
ராமராயர் இங்கிலாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள் அவரைப் பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்னார்கள். அவர் பண்னிக் கொள்ளவில்லை. .....போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம் பண்ணிக்கொள்ள இஷ்டப்படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற்படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக்கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரிகளிடம் போய்ச் சொன்னேன்.....