சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 10

இந்த தேசத்தில் அவர் காலடி படாத வைணவத் தலங்களே இல்லை என்று கூறலாம். வைணவக் கோவில்களில் வடமொழி வேதத்துடன் திராவிட வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தத் தமிழ்ப் பாசுரங்களும் மங்கள சாசனம் செய்யப்பட வேண்டுமென்று ஏற்பாடு செய்து தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் ராமானுஜர்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(8)

1923-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாகபுரியில்  ‘கொடிப் போராட்டம்’  எனும் ஒரு போராட்டம் தொடங்கியது. அது என்ன கொடிப் போராட்டம்? நாகபுரி நகரத்தில் கண்டோன்மெண்ட் என வழங்கப்படும் ஆங்கிலேயர் வசிக்கும் பகுதிக்குள் இந்திய தேசபக்தர்கள் தங்கள் கொடியைப் பிடித்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அப்படி அவர்கள் வசிக்கும் பகுதிக்குள் மூவண்ணக் கொடியைப் பிடித்துக் கொண்டு இந்தியர்கள் போவதா? கூடாது என்று அதற்கு வெள்ளைக்காரர்கள் தடை விதித்தனர். நாகபுரியில் தொடங்கிய அந்த சிறு தீப்பொறி நாடு முழுதும் பரவி எங்கெங்கும் கொடிப் போராட்டம் நடக்கலாயிற்று.

பாஞ்சாலி சபதம்- 1.1.6

இந்திரப்பிரஸ்தத்தில் (இன்றைய தில்லி) தனது தாயாதி சகோதரனான யுதிஷ்டிரன் நடத்திய ராஜசூய யாகம் அவனுக்கு சக்கரவர்த்தி பட்டத்தைப் பெற்றுத் தந்தது. அது அஸ்தினாபுரத்தை ஆண்ட துரியோதனனுக்கு அழுக்காறாமையை ஏற்படுத்தியது. அதையடுத்து, அவன் தனது நிழலாகக் கருதும் தனது தாய்மாமனிடம் பொறாமையுடன் உரைத்தவையே இங்கு மகாகவி பாரதியால் அழகிய கவிதைகளாக வடிவெடுத்திருக்கின்றன...