விவேகானந்தரும் அரவிந்தரும் அருளிய மறுமலர்ச்சி

திருமதி பிரேமா நந்தகுமார் (83), நாடறிந்த பேச்சாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். நமது தலத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இரண்டாவது கட்டுரை இது….

பாஞ்சாலி சபதம் – 1.1.16

பாண்டவர்கள் - கௌரவர்களின் பொதுவான உறவு என்று சொன்னால் அவர் சித்தப்பா விதுரன் தான். அவர் அஸ்தினாபுர அரசின் அமைச்சரும் கூட. அவரையே பாண்டவரை அஸ்தினாபுரம் அழைத்து வருமாறு தூது விடுகிறார் மன்னர்; பாண்டவர்களிடம், துரியனின் தீய உள்நோக்கத்தைப் புலப்படுத்துமாறும் கூறி அனுப்புகிறார். அதன்பின் சோர்வடைந்து வீழ்கிறார். புத்திர பாசத்தால் மயங்கினாலும் நியாய உணர்வுடன் தவிக்கும் மன்னரை மகாகவி பாரதி தனது பாடலில் படம் பிடிக்கிறார்.