குயில் பாட்டு – 9

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இறுதிக் கவிதை (எண்: 9) இது....

சாப விமோசனம்

இந்திய மொழி இலக்கியங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தும் பண்டைய இலக்கியங்களில் ராமாயணமும் மகாபாரதமும்  முக்கியமானவை. இன்றும் தொடரும் இந்த இழையறாத பண்பாட்டு உறவு இல்லாத எழுத்தாளர்களைக் காணல் அரிது. அந்த வகையில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரதான இடம் வகிக்கும் புதுமைப்பித்தன், ராமாயணத்தின் தாக்கத்துடன் 'சாப விமோசனம்' கதையை எழுதியது வியப்பில்லை; ஆனால், கால மாற்றத்துக்கேற்ப தனது சிந்தனையில் எழுந்த கேள்வியையே மையமாக்கி இந்த சிறுகதையைப் புனைந்திருக்கிறார். கதை வெளியான காலத்தில் (1943) பெரும் புயலை உருவாக்கிய கதை இது. கணவரான கௌதம மகரிஷியின் சாபத்தால் கல்லான அகலிகை, ராமனின் பாதத் தூளி பட்டு பெண்ணான கதை நமக்குத் தெரியும்; அதே அகலிகை சீதையை அக்னிப்பிரவேசம் செய்யுமாறு ஸ்ரீராமன் சொன்னான் என்று கேட்ட மாத்திரத்தில் மீண்டும் கல்லாகிறாள்- புதுமைப்பித்தனின் கதையில்....

தமிழ்த் தாத்தா – 65

ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். ஒருமுறை திருநெல்வேலிப் பக்கம் ஏடு தேடச் சென்றிருந்தார். இரவு நேரம். நிலவு காய்ந்து கொண்டிருந்தது. ஒருவர் ஓர் ஏட்டுச் சுவடியைக் கொண்டுவந்து ஐயரிடம் தந்தார். அந்த நிலவொளியில் அதைப் பிரித்துப் பார்த்தார். அது ‘பத்துப்பாட்டு’ என்னும் சங்க நூல் தொகுதி எழுதியிருந்த சுவடி. அந்தப் பத்துப் பாடல்களில்  ‘முல்லைப்பாட்டு’ என்பது ஒன்று. நிலவில் சுவடியைப் பிரித்துப் பார்த்தபோது முல்லைப்பாட்டு கண்ணில் பட்டது. அதைப்பற்றி எழுதும்போது 'நிலவில் மலர்ந்த முல்லை' என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினார். எவ்வளவு பொருத்தமான தலைப்பு! (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் இறுதிப் பகுதி...)

குயில் பாட்டு – 8

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் எட்டாவது கவிதை இது...

காற்றிடைச் சாளரம் – 6

நீண்டு வளர்ந்த தும்பிக்கை நெளிய முறக்காது விசிறிவரும் யானைக்கு வால் மட்டும் பம்பரக் கயிறளவு. பெரிய மனிதர்க்கு சின்னப்புத்தியென வாலாட்டிச் சொல்லிவரும் யானை....

தமிழ்த் தாத்தா (61-64)

தமிழ்நாடு பாக்கியம் செய்தமையால் ஆசிரியப் பெருமான் திரு அவதாரம் செய்தார். இறைவன் இவருக்கு 87 ஆண்டு நீண்ட ஆயுளைக் கொடுத்தான். இவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தமிழுக்காகவே பாடுபட்டார். தமிழ் அன்னையை மீண்டும் பழைய நிலையில் இருக்கச் செய்தார். பழைய அணிகளைச் செப்பம் செய்து அணிந்ததோடு புதிய உரைநடையினாலும் அவளை எழில் கொழிக்கச் செய்தார். தமிழ் உலகம் தம் ஆசிரியரை நன்கு அறிந்து கொள்ளும்படி அவரது வரலாற்றை வெளியிட்டார். பல புலவர் பெருமக்களின் வரலாற்றை வெளியிட்டார். பழைய சங்க இலக்கியங்கள் எல்லாம் இன்றைக்கு மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன என்றால், இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தத் தமிழ்ப் பெருமகனார் செய்த தொண்டுதான். இன்று உலகம் முழுவதும் தமிழ்மொழியைப் பற்றிப் பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன என்றால், அதற்கு முக்கியமான காரணம் இந்தப் பெருமகனார் செய்துள்ள தமிழ்ப் பணியே என்பதை யாரும் மறக்கமாட்டார்கள்... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 61-64 அத்தியாயங்கள்...

குயில் பாட்டு- 7

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் அகவற்பா வடிவிலான, 7வது கவிதை இது...

பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை- நூல் அறிமுகம்

டாக்டர் அம்பேத்கர் 1945-ல், பிரிவினைக்கு முன்பாக எழுதிய புத்தகம் THOUGHTS ON PAKISTAN. அதன் தமிழாக்கம், கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் பி.ஆர்.மகாதேவன். அரிய சரித்திர ஆவணம் இந்நூல்.

தமிழ்த் தாத்தா (56-60)

ஆசிரியப் பெருமானின் எண்பதாவது ஆண்டு நிறைவு நெருங்கிக் கொண்டிருந்தது. சஷ்டியப்த பூர்த்தியைச் சரியாக நடத்தவில்லை, இந்த விழாவையாவது சிறப்பாக நடத்த வேண்டுமென்று அட்வகேட்டாக இருந்த கே.வி.கிருஷ்ணசாமி ஐயர் எண்ணினார். அதற்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டார். இந்த விழா மிகச் சிறப்பாகப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெற்றது. ஸர் முகமது உஸ்மான் தலைமை தாங்கினார். ஆசிரியப் பெருமானின் திருவுருவப் படம் ஒன்றை பல்கலைக்கழக மண்டபத்தில் திறந்து வைத்தார்கள். தலைநகரில் மட்டுமன்றித் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும், பர்மா, இலங்கை ஆகிய இடங்களிலும்கூட ஆசிரியப் பெருமானுடைய சதாபிஷேக விழா நடைபெற்றது....

குயில் பாட்டு- 6

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஆறாவது கவிதை இது...

தமிழ்த் தாத்தா (51-55)

‘தமிழ்விடு தூது’ என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிட வேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப் பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது... (கி.வா.ஜ. எழுதிய ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 51- 55 அத்தியாயங்கள்)....

குயில் பாட்டு- 5

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் ஐந்தாவது பாடல் இது. பொருந்தாக் காதலைக் கண்டு கொந்தளிக்கும் கவியின் கனவுக் கவிதை...

அம்பேத்கர் பார்வையில் கம்யூனிஸம்

1951 அக்டோபர் 6-இல் ஷெட்யூல்டு வகுப்பின் சம்மேளன செயற்குழு கூட்டத்தில், ‘தனிப்பட்டவரின் சுதந்திரம், நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்து, அதற்கு பதிலாக, எதேச்சாதிகாரத்தைக் கொண்டு வருவதை லட்சியமாகக் கொண்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளுடன் ஷெட்யூல்டு வகுப்பினர் சம்மேளனம் எந்த உறவையும் வைத்துக் கொள்ளாது’ என்பதை டாக்டர் அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்....

தமிழ்த் தாத்தா (46-50)

சென்னைக்கு வந்தவுடன் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து நாட்கள் பழைய நூல்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு வந்தது. 1827-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ஐந்து நாட்களும், டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியிலிருந்து ஐந்து நாட்களும் அந்தச் சொற்பொழிவுகள் பல்கலைக் கழகச் செனட் மண்டபத்தில் நடைபெற்றன. அந்தச் சொற்பொழிவுக்காகப் பல்கலைக் கழகத்தார் 500 ரூபாய் வழங்கினர். அதுவரைக்கும் மண்ணெண்ணெய் விளக்கில் பணி செய்து கொண்டிருந்த ஆசிரியர் அந்தப் பணத்தைக் கொண்டு தியாகராச விலாசத்திற்கு மின்சார விளக்குப் போடச் செய்தார். கார்த்திகைத் தினத்தன்று மின்சாரத் தொடர்பு கிடைத்தது நல்ல சகுனமாக ஆசிரியப் பெருமானுக்குத் தோன்றியது.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 46-50 அத்தியாயங்கள்...)

குயில் பாட்டு- 4

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் நான்காவது கவிதை இது...