தமிழ்நாடு பாக்கியம் செய்தமையால் ஆசிரியப் பெருமான் திரு அவதாரம் செய்தார். இறைவன் இவருக்கு 87 ஆண்டு நீண்ட ஆயுளைக் கொடுத்தான். இவர் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தமிழுக்காகவே பாடுபட்டார். தமிழ் அன்னையை மீண்டும் பழைய நிலையில் இருக்கச் செய்தார். பழைய அணிகளைச் செப்பம் செய்து அணிந்ததோடு புதிய உரைநடையினாலும் அவளை எழில் கொழிக்கச் செய்தார். தமிழ் உலகம் தம் ஆசிரியரை நன்கு அறிந்து கொள்ளும்படி அவரது வரலாற்றை வெளியிட்டார். பல புலவர் பெருமக்களின் வரலாற்றை வெளியிட்டார். பழைய சங்க இலக்கியங்கள் எல்லாம் இன்றைக்கு மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன என்றால், இதற்கெல்லாம் மூலகாரணம் இந்தத் தமிழ்ப் பெருமகனார் செய்த தொண்டுதான். இன்று உலகம் முழுவதும் தமிழ்மொழியைப் பற்றிப் பேசி, தமிழ்மொழியை ஆராய்ந்து வருகிறது என்றால், தமிழ் மாநாடுகள் நடைபெறுகின்றன என்றால், அதற்கு முக்கியமான காரணம் இந்தப் பெருமகனார் செய்துள்ள தமிழ்ப் பணியே என்பதை யாரும் மறக்கமாட்டார்கள்... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 61-64 அத்தியாயங்கள்...
Day: April 28, 2022
குயில் பாட்டு- 7
மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் அகவற்பா வடிவிலான, 7வது கவிதை இது...
பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை- நூல் அறிமுகம்
டாக்டர் அம்பேத்கர் 1945-ல், பிரிவினைக்கு முன்பாக எழுதிய புத்தகம் THOUGHTS ON PAKISTAN. அதன் தமிழாக்கம், கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் பி.ஆர்.மகாதேவன். அரிய சரித்திர ஆவணம் இந்நூல்.