தமிழ்த் தாத்தா – 65

ஐயர் எழுதிய கட்டுரைகளுக்குத் தலைப்பிடுவதே அழகாக இருக்கும். ஒருமுறை திருநெல்வேலிப் பக்கம் ஏடு தேடச் சென்றிருந்தார். இரவு நேரம். நிலவு காய்ந்து கொண்டிருந்தது. ஒருவர் ஓர் ஏட்டுச் சுவடியைக் கொண்டுவந்து ஐயரிடம் தந்தார். அந்த நிலவொளியில் அதைப் பிரித்துப் பார்த்தார். அது ‘பத்துப்பாட்டு’ என்னும் சங்க நூல் தொகுதி எழுதியிருந்த சுவடி. அந்தப் பத்துப் பாடல்களில்  ‘முல்லைப்பாட்டு’ என்பது ஒன்று. நிலவில் சுவடியைப் பிரித்துப் பார்த்தபோது முல்லைப்பாட்டு கண்ணில் பட்டது. அதைப்பற்றி எழுதும்போது 'நிலவில் மலர்ந்த முல்லை' என்று தலைப்பிட்டுக் கட்டுரை எழுதினார். எவ்வளவு பொருத்தமான தலைப்பு! (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் இறுதிப் பகுதி...)

குயில் பாட்டு – 8

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் எட்டாவது கவிதை இது...

காற்றிடைச் சாளரம் – 6

நீண்டு வளர்ந்த தும்பிக்கை நெளிய முறக்காது விசிறிவரும் யானைக்கு வால் மட்டும் பம்பரக் கயிறளவு. பெரிய மனிதர்க்கு சின்னப்புத்தியென வாலாட்டிச் சொல்லிவரும் யானை....