பெண்குழந்தையைப் பெற்ற தந்தையர் பாக்கியவான்கள். தனது குழந்தையை தந்தை முத்தமிட்டு, சீராட்டி மகிழ்வது ஒரு தெய்வீக அனுபவம். இதையே கண்ணன் பாட்டு தொகுப்பில் எட்டாவது கவிதையான ‘கண்ணம்மா - என் குழந்தை’ என்ற பாடல் காட்டுகிறது. இப்பாடல் திரையிசைப் பாடலாக பலகோடி மக்களைக் கவர்ந்த பாடல் என்பது கூடுதல் தகவல்...
Day: April 15, 2022
தமிழ்த் தாத்தா (1, 2)
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் (1855-1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத் துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும், தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம். இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி.வா.ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப் பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்....