அதிகமான் நெடுமான் அஞ்சி-6

“இங்கே உள்ள கருவிகள் செல்வப் பிள்ளைகளைப் போலப் பளபளவென்று விளங்குகின்றன; பீலியை அணிந்தும் மாலையைச் சூட்டிக் கொண்டும் அழகாகக் கிடக்கின்றன. பிடிகளை நன்றாகச் செப்பஞ் செய்து திருத்தமாக வைத்திருக்கிறீர்கள். துருவேறாமல் அடிக்கடி நெய் பூசி வருகிறீர்கள். இந்தக் கொட்டிலில் இவை. பாதுகாப்பாக உள்ளன. ஆனால் அதிகமானுடைய படைக்கலங்களோ முனை முறிந்து போயிருக்கும். பலவற்றிற்குக் கங்குகள் ஒடிசலாக இருக்கும்.கைவர்களைக் குத்தி அப்படி ஆயின. ஒரு கருவியாவது முழு உருவோடு இராது. எல்லாம் சிதைந்து உருக்குலைந்திருக்கும்...” (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 6ஆம் அத்தியாயம்)....

பாரதியின் தொழிலாளர் பாடல்கள்

மகாகவி பாரதி தொழிலாளர் நலம் குறித்து எழுதியுள்ள இரு கவிதைகள் இவை. இவற்றில் மறவன் பாட்டில் பல வரிகள் சிதிலமடைந்ததால் கிடைக்கவில்லை. பாரதியின் கவிதைகளில், பல்வகைப் பாடல்கள் பிரிவில் 8, 9 பாடல்கள் இவை....

அழகிய போராட்டம் (பகுதி- 7)

தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை,  சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின்  ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.  ....“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்  அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது.   நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது.  (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் 4வது அத்தியாயத்தின் துவக்கப் பகுதி)...