அண்ணன் - தங்கைக்கு இடையிலான பாசப் பிணைப்பை தனது அமரத்துவமான கவிதை வரிகளால் காவியம் ஆக்கியவர் கவியரசு கண்ணதாசன். திரைப்பாடலிலும் கூட, உயர்தரமான இலக்கியச் சுவையை வழங்க முடியும் என்று காட்டிய இப்பாடல், தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரையுலகிற்கு ஒரு நினைவூட்டும் அமுதப் பேரொளி.
Day: April 24, 2022
இன்றைய இந்தியாவின் முகங்கள்- 2
2013இல் நிதி நிறுவனங்களுக்கென (மியூச்சுவல் ஃபண்ட்) தனியாக ஒரு தளத்தை மும்பை பங்குச்சந்தையில் ஆஷிஷ் சௌஹான் அறிமுகம் செய்தார். அது மட்டுமன்றி சர்வதேச அளவிலான பங்குச்சந்தையை முதன்முதலில் இந்தியாவில் துவங்கினார். இந்தியா இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச், 2017 ஜனவரி மாதத்தில் குஜராத் மாநிலத் தலைநகரான காந்தி நகரில் துவங்கப்பட்டது. அதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.... இப்பொழுது என்எஸ்சி-யின் தலைவராக உள்ள விக்ரம் லிமாயின் பதவி ஓரிரு மாதங்களில் முடிவுறுகிறது.அடுத்த போட்டியாளர்களில் முன்னணியில் இருப்பவர், சர்வதேச அளவில் இந்தியாவின் முகமாக இருக்கும் ஆஷிஷ் சௌஹான்....
மகாமசானம்
வாழ்வின் நிலையாமையை 70 ஆண்டுகளுக்கு முந்தைய நடையில் எழுதி இருக்கிறார் சிறுகதைச் சக்கரவர்த்தி புதுமைப்பித்தன். வாழ்வை முடிக்கப்போகும் கிழட்டுப் பிச்சைக்காரனும், வாழ்வு என்றால் என்னவென்றே அறியாத சிறு குழந்தையும் இயல்பாக சந்திக்கிறார்கள். இருவருக்கும் அந்தச் சந்திப்பு புரிவதாகத் தெரியவில்லை. அதைப் படிக்கும் நமக்குத் தான் நிலையாமை புரிகிறது. அற்புதமான உருவகக் கதை இது...
தமிழ்த் தாத்தா (41-45)
ஆசிரியப் பெருமான் தேடித் தொகுத்திருந்த சுவடிகளில் ‘பெருங்கதை’ என்ற ஒன்று இருந்தது. கொங்குவேள் மாக்கதை என்றும் அது வழங்கும். அது முதலும் முடிவும் இல்லாமல் இருந்தது. பல இடங்களுக்குச் சென்று தேடியும் முழு நூலும் கிடைக்கவில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். ...வடமொழியில் ‘பிரகத்சம்கிதா’ என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்து கொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைத் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலை அச்சுக்குக் கொடுத்தார். அந்தப் பெருங்கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செலவழித்தது இல்லை.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 41- 45 அத்தியாயங்கள்...)
குயில் பாட்டு- 3
மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் மூன்றாவது கவிதை இது...