அதிகமான் நெடுமான் அஞ்சி-12

அந்தப் பெண்ணுக்கு அதிகமானிடத்திலும் அவனைச் சேர்ந்தோரிடத்திலும் கட்டுக்கடங்காத வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. பழிவாங்க வேண்டும் என்ற துடிப்பும் உண்டாயிற்று. யாரேனும் அதிகமானைப் புகழ்ந்தால் அவள் அங்கே நிற்பதில்லை. 'கற்பின் பெருமையை உணராத, பெண்மையின் உயர்வைக் காப்பாற்றாத, அரசன் அரசனா? அரக்கன் அல்லவா?' என்று எண்ணி எண்ணிப் பொருமினாள். பாவம்! யாருக்கும் நினைந்து தீங்கு புரியாத அதிகமான் ....அந்தப் பெண்ணளவில் பொல்லாதவன் ஆகி விட்டான். அதை ஊழ்வினைப் பயன் என்று சொல்வதையன்றி வேறு என்ன வென்பது? (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 12வது அத்தியாயம்)...

பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-3

பிரிட்டனில் தொழிலாளர் கட்சித் தலைவராக இருந்தவர் ராம்சே மெக்டொனால்ட்; 1929- 1935இல் அந்நாட்டுப் பிரதமர் ஆனவர். 1914-இல் அவர் எதிர்க்கட்சித் தலைவர்களுள் ஒருவராக இருந்தபோது,  இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு மககவி பாரதி எழுதிய கடிதம் இது. இக்கடிதம்  ‘தி ஹிண்டு’ பத்திரிகையிலும் வெளிவந்துள்ளது. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து தப்பி பாண்டிச்சேரி செல்ல வேண்டிய கட்டாயம் தனக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும், தன்னை பொய்வழக்குகளில் கைது செய்யத் துடிக்கும் பிரிட்டீஷ் இந்திய அரசு குறித்தும் இக்கடிதத்தில் பாரதி குறிப்பிட்டிருக்கிறார். ஆங்கிலேய அரசுக்கு கடிவாளமாக இருக்கக் கூடிய தொழிலாளர் கட்சித் தலைவரின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் செல்லுமானால் நற்பயன் கிடைக்கும் என்று மகாகவி பாரதி நம்பியிருப்பதை, கடித வாசகங்கள் காட்டுகின்றன. அந்நிய ஆட்சியை எதிர்த்து, பிரிட்டீஷார் தலையிட இயலாத பாண்டிச்சேரியில் அரசியல் அடைக்கலம் புகுந்த நிலையிலும், பாரதி சுதந்திர தாகத்துடன் தனது எழுத்து வன்மையுடன் போராடியதற்கான சான்றே இக்கடிதம்...

நவதந்திரக் கதைகள்

கதைக்குள்ளே கதை சொல்கிற பான்மையில் அமைந்தவை இந்த நவதந்திரக் கதைகள். பஞ்சதந்திரக் கதைகளைப் போன்ற கதைப் போக்குக் கொண்டது என்றும் கொள்ளலாம். மகாகவி பாரதியின் கதை சொல்லும் வன்மைக்கு இக்கதைகள் மிகச் சிறந்த சான்று. இவை, தொடராக முதன்முதலாக ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் 10-8-1916ஆம் தேதியிட்ட இதழில் பிரசுரமாகத் தொடங்கியது. இடையிடையே சில சமயங்களில் கதைத் தொடர் பிரசுரமாகாமல் இருந்ததும் உண்டு. கதைத் தொடர் நிறைவு பெறவில்லை; 26-2-1918ஆம் தேதிய இதழோடு நின்று விடுகின்றது. இந்தக் கதைகள் 1928 ஆம் வருஷம் பாரதி பிரசுராலயத்தாரால் நூலாக்கம் செய்யப்பட்டன....

கண்ணன் பாட்டு- 1

‘முப்பெரும் பாடல்கள்’ எனப் போற்றப்படும் மகாகவியின் பாடல்கள்: கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகியவை. இவற்றில் கண்ணன் பாட்டு மிகவும் அலாதியானது. பக்திப் பேருவகையின் உச்சத்துக்கு இப்பாடல்கள் உதாரணம்....‘கண்ணன் பாட்டு’ என்ற தலைப்பில் பாரதியார் 23 பாடல்களைப் பாடியிருக்கிறார். இவை முறையே, கண்ணனைத் தோழனாக, தாயாக, தந்தையாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலனாக, காந்தனாக, காதலியாக, ஆண்டானாக, குலதெய்வமாக என்று வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறார். ...மற்ற தலைப்புகளில் எல்லாம் ஒவ்வொரு பாட்டு வீதம் எழுதிய பாரதி, காதலன் எனும் தலைப்பில் 5 பாடல்களையும், காதலி எனும் தலைப்பில் 6 பாடல்களையும் எழுதியிருக்கிறார். ... (இப் பாடல், ’கண்ணன் - என் தோழன்’ என்ற முதல் பாடலாகும்).