பன்மொழிப் புலவரும், புத்தத் துறவியும், ஹிந்தி பயண இலக்கியத்தின் தந்தையுமான ராகுல சாங்கிருத்தியாயன், மார்க்சியத் தத்துவம் இந்திய இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமான முன்னோடிகளுள் ஒருவர். இவர் சிறையிலிருந்தபடி எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ புதினம் 1944ல் வெளியானது. அப்போதே பலத்த எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்நாவல், இதன் உள்ளடக்கத்தாலும், இடதுசாரிப் பார்வையாலும் பிரபலம் அடைந்தது.... ஒருவர் ராகுலின் கருத்துக்களுடன் முரண்படலாம்; ஆனால் அவரை நிராகரிக்க முடியாது. அவரது தர்க்க ஆற்றலும், நுண்ணறிவும், பகுத்தறியும் திறனும் இன்றைய ஆய்வாளர்களுக்கும் வழிகாட்டக் கூடியவை....
Day: April 3, 2022
அதிகமான் நெடுமான் அஞ்சி- 7
அதிகனின் கையில் வேல்; காலில் கழல்; உடம்பிலே வேர்வை; அவன் கழுத்திலே பச்சைப்புண். அவன் தலையிலே பனைமாலை; போர் செய்ய அணிந்த வெட்சி மாலை, வேங்கைக் கண்ணி இவற்றை அவன் முடியிலே சூடியிருந்தான். புலியோடு பொருத ஆண் யானையைப்போல இன்னும் அவனுக்குப் பகைவர்பால் உண்டான சினம் அடங்க வில்லை. அவனோடு பொருதவர்களில் யார் உய்ந்தார்கள்? பகைவர்களைக் கண்டு சினத்தாற் சிவந்தகண் இன்னும் சிவப்புத் தீரவில்லை; ஆம், தன் தவக்கொழுந்தாகிய மகனைப் பார்த்தும் கண் சிவப்பு வாங்கவில்லை. வீரமே இப்படி உருவெடுத்து வந்ததோ என்று வியந்தார் ஒளவையார். அவருடைய வியப்புணர்ச்சி உடனே பாடல் வடிவத்தை எடுத்தது.... கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 7வது அத்தியாயம்)...
காற்றிடைச் சாளரம் -2
-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் பிறந்த போதே தொப்புள் தழும்பு போல ஒட்டிக்கொண்டது காலம். . துயிலெழவும் துயில்கொள்ளவும் உணவுண்ணவும் கழிவு நீக்கவும் கற்றறியவும் கலை புரியவும் என ஒவ்வொன்றுக்கும் உடனிருந்தது காலம். . காலம் பார்த்து கல்வி காலம் பார்த்து காரியம் காலம் பார்த்து உணவு காலம் பார்த்து உறவு காலம் பார்த்து பிரிவு கலவியிலும் நுழையும் காலம். காலம்... காலம்... காலம். . பரமனின் கரத்திலொட்டிய பிரம்மனின் கபாலமாய் மனதிலொட்டிய காலத்தை சுமந்தலைகிறது வாழ்வு. . வேறு … Continue reading காற்றிடைச் சாளரம் -2
பாரதியின் நாட்டுக் கல்வி
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு; பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் 10வது பாடல் இது...
அழகிய போராட்டம் (பகுதி- 8)
ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே. சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம் 4-இன் நிறைவுப் பகுதி)....