அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு

சமஸ்கிருத மொழியின்மேல் அண்ணல் அம்பேத்கருக்கு என்றைக்குமே வெறுப்பில்லை. சமஸ்கிருத மொழி இந்த பாரத தேசத்தின்  மொழியாக, தேசிய மொழியாக வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த போது அதை நிரூபித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதுபற்றி பிடிஐ நிருபர், நீங்கள் சமஸ்கிருதத்திற்கு ஆதரவு தெரிவித்தீர்களாமே என்று அம்பேத்கரிடம் கேட்டபோது, ஆம், அதில் என்ன தவறு இருக்கிறது? என்று அந்த நிருபரைப் பார்த்து கேள்வி கேட்டார். (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த இரண்டாவது கட்டுரை இது... தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் எழுதியது)....

அதிகமான் நெடுமான் அஞ்சி-15

அதிகமானுடைய நாட்டில் யாருக்கும் எதனாலும் அச்சமே இல்லாமல் இருந்தது. காடுகளில் மாட்டு மந்தைகள் கன்றுகளோடு தங்கும் யாரும் அவற்றை அடித்துச் செல்லமாட்டார்கள். கவலையில்லாமல் அவை புல்லைத் தின்று இன்புறும். நெடு வழியிலே போகும் அயலூரார் எங்கே வேண்டுமானாலும் தங்கலாம். வழிப் பறிக்காரர்கள் வருவார்களோ என்று சிறிதும் அஞ்ச வேண்டுவதில்லை. நெற்களங்களில் நெல் குவியல் குவியலாகக் காவலே இல்லாமல் போட்டது போட்ட படியே கிடக்கும்; ஒரு துரும்புகூடக் களவு போகாது. மக்களுக்குப் பகைவரே யாரும் இல்லை. இப்படித் தன் நாட்டில் அமைதியும் நற்பண்பும் நிலவும் படி செங்கோலோச்சினான் அதிகமான். உலகமே அவனைப் புகழ்கிறது. வீரத்தில் குறைந்தவனா? அவன் வாள் தன் குறியிலே சிறிதும் தப்பாது. இத்தகைய குரிசில் இப்போது களத்தில் கிடக்கிறான். தாயைப் பிரிந்த குழந்தையைப்போலச் சுற்றத்தார் மூலைக்கு மூலை வருந்திப் புலம்ப, அவனைக் காணாமல் இனிப் பசி வந்து வருத்துமே என்று அஞ்சும் மக்கட் கூட்டம் புலம்பும். அப்படித் துன்புற்று வைகும் உலகம் இழந்ததைவிட, அறம் இல்லாத கூற்றுவனே, நீ இழந்தது தான் மிகப் பெரிது. விதைத்துப் பயிரிட்டு விளைவு செய்யும் வயலின் பெருமையை அறியாமல் வீழுங் குடியை உடைய உழவன் விதை நெல்லையே சமைத்து உண்டதுபோல நீ செய்து விட்டாயே! இந்த ஒருவனுடைய ஆருயிரை நீ உண்ணாமல் இருந்திருந்தாயானால் அவன் அமர் செய்யும் களத்தில் அவன் கொன்று குவிக்கும் பகைவர்களுடைய உயிரைப் பருகி நிறைவு பெற்றிருப்பாயே!' (கி.வா.ஜ.வின்/ அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் நிறைவுப் பகுதி.

திராவிட இயக்கம் – புனைவும் உண்மையும்: நூல் அறிமுகம்

பிராமணரல்லாதோர் இயக்கம் எவ்வாறு தென்னிந்திய லிபரல் கூட்டமைப்பாக மாறியது? அது எவ்வாறு ஜஸ்டிஸ் கட்சியாகப் பெயர் மாற்றம் பெற்றது? அதில் இருந்த பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் போன்றவர்கள் எவ்வாறு தடம்புரண்டனர்? ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக ஈ.வெ.ராமசாமி எப்போது உருவானார்? ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் எவ்வாறு விழுங்கியது? உண்மையிலேயே திராவிட இயக்கம் உள்ளதா? இருந்தால் அதன் வயது 100 தானா?

இவ்வாறு பல கேள்விகளை எழுப்பி இந்நூலில் சரித்திரச் சான்றுகளுடன் பதில் அளித்திருக்கிறார் மலர்மன்னன். திராவிட இயக்கம் என்ற சொல்லாட்சியே ஒரு மோசடியான புனைவு, தமிழகத்தில் இருப்பது திராவிட அரசியல் மட்டுமே என்று முடிக்கிறார். சுள்ளெனச் சுடும் உண்மைகள் நிறைந்த நூல் இது.

கண்ணன் பாட்டு- 4

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், நான்காவது கவிதை இது. கண்ணனைத் தன் சேவகனாக்கிக் கொள்ளும் கவியின் கற்பனை வளம் இது...

வலிமைக்கு மார்க்கம்- 3

”நீங்கள் நல்ல நினைப்புக்களை நினையுங்கள். அவை உங்கள் புறவாழ்க்கையில் நல்ல நிலைமைகளில் உருக்களோடு விரைவில் வந்து பொருந்தும். நீங்கள் உங்கள் மனோ சக்திகளை அடக்கி ஆளுங்கள். நீங்கள் உங்கள் புறவாழ்க்கையை உங்கள் இஷ்டப்படி திருத்திக் கொள்ளத்தக்க சக்தியுள்ளவர்களாவீர்கள். ஒரு புண்ணியவான் தனது அகத்திலுள்ள சகல சக்திகளையும் பூரணமாக ஆள்கிறான். ஒரு பாவி தனது அகத்திலுள்ள சகல சக்திகளாலும் பூரணமாக ஆளப்படுகிறான். இதுதான் இவ்விருவருக்குமுள்ள வித்தியாசம்.” (வ.உ.சி.யின் வலிமைக்கு மார்க்கம் நூலின் 8, 9 அத்தியாயங்களில் இருந்து)...