அதிகமான் நெடுமான் அஞ்சி-5

ஒரு கொடையாளியிடம் பரிசில் பெற்ற பாணன் வேறு ஒரு பாணனைச் சந்தித்தால், தான் பெற்ற இன்பத்தை அவனும் பெறட்டும் என்று எண்ணி, அந்தக் கொடையாளியின் சிறப்டை அவனுக்கு எடுத்துரைப்பான்; அவன் இருக்கும் இடத்துக்குப் போக வழி இன்னது என்று கூறுவான். இப்படி வழிகாட்டுவதாகப் புலவர்கள் பாடல்கள் பாடி வள்ளல்களை வாழ்த்துவார்கள். அந்த வகையில் அமைந்த பாடலை  ‘ஆற்றுப்படை’ என்று சொல்வர். ஒரு புலவன் வேறொரு புலவனிடம் தனக்குப் பரிசில் வழங்கிய வள்ளலிடம் செல்ல வழிகாட்டுவதானால் அதற்குப்  ‘புலவராற்றுப்படை’ என்று பெயர் அமையும். கூத்துக்கலையில் வல்லவனுக்கு மற்றொரு கூத்தன் சொன்னால் அது  ‘கூத்தராற்றுப்படை’ என்ற பெயர் பெறும். அப்படியே பாணனைப் பார்த்துச் சொல்வதை ‘பாணாற்றுப்படை’யென்றும், விறலிக்கு வழி காட்டுவதை  ‘விறலியாற்றுப்படை’யென்றும் பெயரிட்டு வழங்குவர். நேரே ஒருவனுடைய புகழைச் சொல்வதைவிட இப்படி ஆற்றுப்படை உருவத்தில் பாடுவது சுவையாக இருக்கும். (கி.வா.ஜ.வின் அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 5ஆம் அத்தியாயம்)...

பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள்

மகாவி பாரதியின் பெண் விடுதலைப் பாடல்கள் மிக சிறப்பானவை. பாரதியின் கவிதைகளில் பல்வகைப் பாடல்கள் பிரிவில் உள்ள 4 முதல் 7 வரையிலான கவிதைகள் இவை....

அழகிய போராட்டம் (பகுதி- 6)

பகுதிகளிலும் நடந்ததாகத் தெரியவரும்  போராட்டங்கள் எல்லாம் 1920-  1930களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளைப் போலவே  இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1810-11 வாக்கில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த விஷயங்களை சுருக்கமாக இங்கு மறு பார்வை பார்ப்பது மிகவும் அவசியமாக இருக்கும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் மூன்றாவது அத்தியாயம்...)