குயில் பாட்டு – 9

மகாகவி பாரதியின் ‘குயில் பாட்டு’ தொகுப்பில் இறுதிக் கவிதை (எண்: 9) இது....

சாப விமோசனம்

இந்திய மொழி இலக்கியங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தும் பண்டைய இலக்கியங்களில் ராமாயணமும் மகாபாரதமும்  முக்கியமானவை. இன்றும் தொடரும் இந்த இழையறாத பண்பாட்டு உறவு இல்லாத எழுத்தாளர்களைக் காணல் அரிது. அந்த வகையில், தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பிரதான இடம் வகிக்கும் புதுமைப்பித்தன், ராமாயணத்தின் தாக்கத்துடன் 'சாப விமோசனம்' கதையை எழுதியது வியப்பில்லை; ஆனால், கால மாற்றத்துக்கேற்ப தனது சிந்தனையில் எழுந்த கேள்வியையே மையமாக்கி இந்த சிறுகதையைப் புனைந்திருக்கிறார். கதை வெளியான காலத்தில் (1943) பெரும் புயலை உருவாக்கிய கதை இது. கணவரான கௌதம மகரிஷியின் சாபத்தால் கல்லான அகலிகை, ராமனின் பாதத் தூளி பட்டு பெண்ணான கதை நமக்குத் தெரியும்; அதே அகலிகை சீதையை அக்னிப்பிரவேசம் செய்யுமாறு ஸ்ரீராமன் சொன்னான் என்று கேட்ட மாத்திரத்தில் மீண்டும் கல்லாகிறாள்- புதுமைப்பித்தனின் கதையில்....