அம்பேத்கரும் தேசியமும்

தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே....குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை. (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 5வது கட்டுரை இது... பத்திரிகையாளர் சேக்கிழான் எழுதியது)....

கண்ணன் பாட்டு- 7

கண்ணனை சற்குருவாக வரித்த பாரதி, ஆரம்பத்தில் இந்த சற்குரு தகுதியானவர் தானா என்று தடுமாறுகிறார். ஆனால், மாசை நீக்கும் குருவுக்கு சீடனின் மனக் குழப்பம் தெரியாதா? சற்குரு சீடன் பாரதியை வசப்படுத்தி வழிப்படுத்துகிறார். அதுவே இக்கவிதை... கண்ணன் பாட்டு தொகுப்பில் ஏழாவது கவிதை...

Phiosopher Saint – நூல் அறிமுகம்

நாராயண குருவின் நூல்களைப் பற்றி, அதில் உள்ள கருத்துக்களைப் பற்றி நன்கு புரியும்படி பல கட்டுரைகளை சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் எழுதியுள்ளார். அதில் சில இந்நூலில் உள்ளன. நாராயண குருவுடன் நெருக்கமாக பழகியவரும் சீடருமான கவிஞர் குமரன் ஆசான் எழுதியுள்ள ‘நாராயண குருவின் வாழ்க்கைச் சுருக்கம்’ இந்த நூலில் உள்ளது. நாராயண குருவை தத்துவார்த்த ரீதியில் முன்வைத்த நடராஜ குரு எழுதிய ‘குருவின் சொல்’ என்ற நூலில் இருந்து இரண்டு அத்தியாயங்களும் இதில் உள்ளன. நாராயண குருவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் காலவரிசைப் பட்டியல் இதில் உள்ளது. அவர் எழுதிய நூல்கள், மொழிபெயர்ப்புகளின் பட்டியலும், அவரைப் பற்றி புரிந்துகொள்ள மற்றவர்கள் எழுதிய நூல்களில் முக்கியமானவற்றின் பட்டியலும் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாராயண குருவின் வாழ்க்கையையும் தத்துவத்தையும் சொல்வதென்பது, சுவாமி ஜான் ஸ்பியர்ஸ் வார்த்தையில் சொல்வதென்றால், கடலைக் குவளையால் அளப்பது போலத் தான்....

தமிழருக்கு

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதம் மிஞ்சிவிட்டன. உனது மதக் கொள்கைகள், லெளகீகக் கொள்கைகள், வைதிக நடை – எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட இடங்கொடுத்துவிட்டாய். இவற்றை நீக்கிவிடு. வீட்டிலும், வெளியிலும, தனிமையிலும், கூட்டத்திலும், எதிலும், எப்போதும் நேர்மையிருக்க வேண்டும்; உண்மையிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்ற வரை தடுக்க வேண்டும். எல்லாப் பேறுகளைக் காட்டிலும் உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர். உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால், தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய். 

கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்

     "அதென்ன தாத்தா, கன்னங்கறேலுன்னு நவ்வாப் பழம் மாதிரி களுத்திலே இருக்கு? அதைக் கடிச்சுத் திங்கணும் போலே இருக்கு" என்று கண்களைச் சிமிட்டிப் பேசிக் கொண்டு மடியில் எழுந்து நின்று, கழுத்தில் பூப்போன்ற உதடுகளை வைத்து அழுத்தியது. இளம் பல் கழுத்தில் கிளுகிளுத்தது. கடவுள் உடலே குளுகுளுத்தது.

     "கூச்சமா இருக்கு" என்று உடம்பை நெளித்தார் கடவுள்.

(புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ சிறுகதையில் இருந்து)....