மகாகவி பாரதியின் ’ஞானரதம்’ பாரதியின் உரைநடைக் கதை; குறும் புதினம்; அற்புதமான தத்துவ விசாரணை. ஆங்காங்கே தேசத்தின் வீழ்ச்சி குறித்த புலம்பலுடன் விழிப்புணர்வூட்டும் கடமையுணர்வும் உண்டு.... வாழ்வின் உன்னதக் கணமொன்றைத் தேடியலையும் பாரதியின் ஆன்மா, தன்னையே கதையின் நாயகனாக்கி, மன ரதமேறி வெவ்வேறு உலகங்களில் சஞ்சாரம் செய்கிறது. கற்பனைகளுக்கும், நினைவுகளுக்கும் தூரம் என்பது ஒரு பொருட்டாகுமா, என்ன? துன்பங்களை ஊடறுத்துச் சென்றுவர பாரதி தேர்வு செய்த ஐந்து உலகங்களும் உலகின் ஒவ்வொரு மனிதனுக்கானவையே....தற்காலத்தில் ‘டைம் மெஷின்’ (கால இயந்திரம்) என்ற கருதுகோளுடன் புதினங்கள் புனையப்படுகின்றன. இதற்கு ஒப்பான ஒரு சிந்தனையை நூறாண்டுகளுக்கு முன்னமே தமிழ் இலக்கியத்தில் தனது ஞானரதம் வாயிலாக அறிமுகப்படுத்தியவர் பாரதி என்று சொல்லலாம். அதிலும் தன்னையே கதையின் நாயகன் ஆக்கிக்கொண்டு, சுய எள்ளலுடன் எதையும் அணுகும் சமநிலைப் பார்வை, இந்தப் படைப்பை பேரிலக்கியம் ஆக்குகிறது.....
Day: April 5, 2022
கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும்
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் ‘திருக்குறள்’ என்ற ஒப்பற்ற நூலைத் தந்திருக்கிறார். இன்றும் திருக்குறளின் மூலம் வாழ்ந்து, திருவள்ளுவர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்....சுவாமி விவேகானந்தர் தாம் வாழ்ந்த காலத்தில் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு தன் சொந்தக் கல்வியை இழந்து, அறியாமையிலும் வறுமையிலும் சிக்கித் தவித்த எண்ணற்ற மக்களின் உள்ளத்தில் தன் சாகாவரம் பெற்ற சொற்களின் மூலம் எழுச்சி தீபம் ஏற்றியவர்....மகான்கள் வாழ்ந்த காலம் வேறாக இருக்கலாம். அவர்களது மொழி வேறாக இருக்கலாம். ஆனால் அவர்களுடைய கருத்துக்களில் காணப்படும் ஒற்றுமை என்றும் உய்த்து உணரத்தக்கதாகும்.... (பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் கட்டுரை)...
அதிகமான் நெடுமான் அஞ்சி-9
தனக்காக ஓரியைக் கொன்றதுதான் காரியின் இன்றை நிலைக்குக் காரணம் என்பதைப் பெருஞ் சேரலிரும்பொறை உணர வேண்டுமென்றே இப்படிப் பேசினான் மலையமான். அவ்வரசன் அதை நன்கு உணர்ந்தான். "எனக்குக் கொல்லிக் கூற்றத்தை ஓரியினிடமிருந்து கைப்பற்றித் தந்த வீரத்தை நான் மறப்பவன் அல்லன். எப்பாடு பட்டாவது உம்முடைய கோவலூரை அதிகமானிடமிருந்து உம்முடைய ஆட்சிக்கு வரச்செய்து பழையபடி உம்மை மலாட்டின் தலைவனாக ஆக்குவேன். நான் சேரர் குலத்தில் தோன்றியது உண்மையாயின் இந்தச் சொல்லை நிறைவேற்றுவேன்" என்று வீறுடன் வஞ்சினம் கூறினான் சேரன்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 9வது அத்தியாயம்)....
அழகிய மரம்: நூல் மதிப்புரை
18-ஆம் நூற்றாண்டில் பாரதத்தின் பாரம்பரியக் கல்வி முறை எப்படி இருந்தது என்பதை ஆராயும் இந்நூல், மேற்கண்ட வினாக்களுக்கு தக்க ஆதாரங்களுடனும், குறிப்புகளுடனும் விரிவான விடைகளை அளிக்கின்றது.... காந்திய சிந்தனையாளரான தரம்பால் அவர்கள், ஆங்கிலத்தில் ‘The Beautiful Tree’ என்று எழுதிய நூலை தமிழில் பி.ஆர்.மஹாதேவன் அவர்கள் ‘அழகிய மரம்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்து வழங்கியுள்ளார். இந்நூலிற்கான தலைப்பை காந்தியடிகள் எழுதிய குறிப்பிலிருந்து தேர்வு செய்துள்ளனர்....