அதிகமான் நெடுமான் அஞ்சி-11

ஒளவையார் சிறிது பேசாமல் இருந்தார். உவமையை எதற்காகச் சொன்னார் என்று முன் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப் புலமைப் பிராட்டியாரே உவமையை விளக்க முன்வந்தார்: "அந்தத் தீக் கடைகோல் வீட்டின் இறப்பிலே செருகி யிருக்கும்போது தன் ஆற்றல் தோன்றாமல் வெறும் கோலாக இப்பதுபோல, மிடுக்கு அற்றவனைப் போல் அமைந்திருக்கும் இயல்பும் நம் அரசனிடம் உண்டு. தான் தோன்றாமல் இருக்கவும் வல்லவன் அவன். செவ்வி நேர்ந்தபோது அந்தக் கடைகோலில் எரி முறுகி எழுந்து கொழுந்து விட்டுப் புறப்படுவது போல் அவன் புறப்படவும் வல்லவன். இன்ன காலத்தில் இது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். கிடக்கும்போது கிடந்து பாயும்போது நன்றாகப் பாயவல்ல பெரு வீரனை யல்லவா நாம் மன்னனாகப் பெற்றிருக்கிறோம்?" பேச்சை முடித்த மூதாட்டியார் பொருள் செறிந்த பாடல் ஒன்றைச் சொன்னார்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 11வது அத்தியாயத்திலிருந்து)...

பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-2

மகாகவி பாரதி தனது அரசியல் குருநாதர் திலகருக்கு எழுதிய கடிதம், நியூ இண்டியா, தி ஹிண்டு பத்திரிகைகளுக்கு எழுதிய கடிதங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன....

சின்னச் சங்கரன் கதை

முற்றுப் பெறாமல் நமக்குக் கிடைத்த மகாகவி பாரதியின் கதைப் பொக்கிஷங்களுள்  ‘சின்னச் சங்கரன் கதை’யும் அடங்கும். இந்தக் கதைத் தொடர் தியாகசீலர் சுப்பிரமணிய சிவம் நடத்திய ‘ஞானபாநு’ மாதப் பத்திரிகையிலே 1913 மே மாத இதழில் முதன்முதலாக வெளிப்பட்டது; 1914 மார்ச் மாத இதழுடன் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை. அதாவது, நான்கு அத்தியாயங்களே பிரசுரமாகி உள்ளன. இந்தக் கதையை பாரதி தமது சொந்தப் பெயரில் எழுதாமல், ‘சாவித்திரி’ என்ற புனைபெயரில் எழுதினார். கதையின் தொடர்ச்சியைப் பாரதி எழுதத் திட்டமிட்டிருந்தார் என்பதை  அவர் எழுதிய குறிப்பொன்றால் தெரிந்துகொள்ள முடிகின்றது. பாரதியின் அதீத நையாண்டித் திறனுக்கு அற்புதமான உதாரணம், இந்த முற்றுப் பெறாத புதினம்....

லஜ்ஜா: நூல் மதிப்புரை

பங்களாதேஷ் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1993-இல் வங்கமொழியில் எழுதிய ‘லஜ்ஜா’ புதினம், அவரை தனது தாய்நாட்டிலிருந்தே விரட்டியடித்தது. 1994-இல் நாடுகடத்தப்பட்ட அவர், இந்தியாவில் விருந்தினராகவும் அரசின் பாதுகாப்பிலும் இருப்பதால்தான் இன்னமும் உயிருடன் உள்ளார். அப்படி என்ன அந்தப் புதினத்தில் எழுதி விட்டார்? அவருக்கு பத்வா விதித்து, கொலை செய்யத் தேடி அலையும் மதத் தீவிரவாதிகள், எதற்காக அவ்வாறு செய்கின்றனர்? அவரை அந்நாட்டு அரசு ஏன் பாதுகாக்க முற்படவில்லை? இக்கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், இந்த நூலைப் படிக்க வேண்டும்..... ‘லஜ்ஜா’ என்றால் வங்க மொழியில் ‘அவமானம்’ என்று பொருள். அவமானம் யாருக்கு? வங்க மொழி அடிப்படையில் மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்கத்துக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தானில் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடிப் பெற்றது தான் பங்களாதேஷ். ... ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியா செல்வதற்கு வாய்ப்புகள் இருந்தபோதும், உள்ளூர் முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை நம்பி கிழக்கு பாகிஸ்தானிலும், பின்னாளில் பங்களாதேஷிலும் தங்கிய ஹிந்துக்களை, அந்நாட்டு முஸ்லிம் மக்கள் வஞ்சித்துவிட்டதை தீராக்கோபத்துடன் எழுதிய தஸ்லிமா, அதுவே அவமானம் என்கிறார்.