அம்பேத்கரின் நூல்கள்

‘கல்வி, பொது சுகாதாரம், சமூக ஆரோக்கியம், வீடு ஆகியவை அடிப்படைத் தேவைகள்’ என்கிறார் அம்பேத்கர். குடும்பக் கட்டுப்பாடு, தேச வளர்ச்சிக்கு அவசியம். பெண்களுக்கு சமஉரிமை அளிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலாளர்கள், ஜாதி ரீதியாகப் பிரிந்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. சுதந்திரப் பொருளாதார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

(நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 3வது கட்டுரை- திருநின்றவூர் ரவிகுமார் எழுதியது)...

கண்ணன் பாட்டு- 5

மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு தொகுப்பில் 5வது கவிதை இது. கண்ணனைத் தம் மன்னனாகக் கருதிப் பாடியது இப்பாடல். ”சக்கரத்தை யெடுப்ப தொருகணம்; தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்” என்ற வரிகளில் பாரதியின் நெக்குருக வைக்கும் பெருமிதத்தைக் காண்கிறோம்...

மொழிகளில் பேதம் எதற்கு?

இதுவே ஹிந்துப் பண்பாட்டின் சிறப்பு. பலவித மொழிகளாகிய ரத்தினங்களை ஹிந்து தர்மம் என்ற ஒற்றை நூலே மாலையாகக் கோர்த்திருக்கிறது. இந்த மணிமாலையின் அழகு ஜுவலிக்கிறது; கிறங்கச் செய்கிறது. இந்த மணிமாலை புனிதமானது; நமது சிறப்பை வெளிக்காட்ட அணிவதற்கானது; உலகம் போற்றும் பண்பாட்டின் சின்னமானது. எதையும் உணரும் அறிவின்றிப் பிய்த்தெறியும் குரங்குகளுக்கு இதன் அருமை புரியாது. எனவே இந்த மணிமாலையைப் போற்றிப் புரக்க வேண்டியது நம் அனைவர்தம் கடமை.

மொழிகளிடையே போட்டியோ, பேதமோ தேவையில்லை; அதேசமயம் தாய்மொழியை மறத்தல் போலப் பாவம் பிறிதில்லை. எந்த ஒரு மொழியும்- அது ஆங்கிலமோ, ஹிந்தியோ, வேறெந்த மொழியோ ஆயினும்- நமது ஞானத்தின் திறவுகோல். எனவே, எத்துணை மொழிகள் கற்றாலும் நல்லதே. அப்போதுதான் நமது இலக்கியச் செல்வங்களைப் பகிர்ந்து உலகை மேம்படுத்த இயலும். நமது தாய்மொழியை பிழையறக் கற்போம்; ஞானத்தை வசப்படுத்த பிற மொழிகளும் கற்போம்! நமது பண்பாட்டைக் காத்த பேரருளாளர்கள் போல, நாமும் மொழிகளிடையே இணக்கம் கண்டு, இலக்கியச் செழுமை வளர்ப்போம்!  இனிய பாரதம் காப்போம்!

வலிமைக்கு மார்க்கம்- 4

உண்மையான ஆரோக்கியமும் உண்மையான வெற்றியும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்தே நிகழ்கின்றன; ஏனெனில், நினைப்புலகத்தில் அவையிரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாத விதத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. மன நேர்மை சரீர ஆரோக்கியத்தை உண்டு பண்ணுவதுபோல, ஒருவன் குறித்த காரியங்களை நேராகச் செய்து முடிக்குமாறும் செய்கின்றது. நீங்கள் உங்கள் நினைப்புக்களை ஒழுங்குபடுத்துங்கள்; உங்கள் வாழ்க்கை ஒழுங்காகி விடும். விருப்பும் வெறுப்புமாகிய கலக்க நீரில் அமைதியாகிய நெய்யை வாருங்கள்; கேடாகிய புயல் எவ்வளவு அச்சத்தை உண்டாக்கினும் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் செல்லும் உங்கள் ஆன்மப்படகை உடைக்கச் சக்தியில்லாததாய்விடும். அப்படகை உற்சாகத்தோடும் அசையாத நம்பிக்கையோடும் செலுத்துவீர்களாயின், அது கரைக்குப் போய்ச் சேர்வது நிச்சயத்திலும் நிச்சயம். மற்றபடி அதனைத் தாக்கக்கூடிய பல புயல்கள் அதனைத் தாக்காமல் அதன் பக்கத்திற் கூடிச் சென்றுவிடும். நம்பிக்கையின் பலத்தினாலேயே நிலைநிற்கும் ஒவ்வொரு வேலையும் செய்யப்படுகின்றது. நீங்கள் வெற்றியடைய விரும்பின், நீங்கள் அழியாது நிலைநிற்க விரும்பின், மெய்ப்பொருளிடத்து நம்பிக்கை வையுங்கள்; எல்லாவற்றையும் ஆள்கின்ற அம்மெய்ப்பொருளின் நீதியினிடத்து நம்பிக்கை வையுங்கள்; உங்களுடைய வேலையிலும் அதனைச் செய்து முடிக்கும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை வையுங்கள். இந்நம்பிக்கையாகிய மலையின்மீது உங்கள் கட்டடத்தைக் கட்டுங்கள். ... (வ.உ.சி.யின் ‘வலிமைக்கு மார்க்கம்’ நூலின் 10வது அத்தியாயம்)...