பாரதியின் கடிதங்கள்- தொகுப்பு-1

மகாகவி பாரதி தனது மனவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம், அவரது தன்னிலை விளக்கம். தவிர, தமிழறிஞர் மு.ராகவையங்காரைப் பாராட்டி எழுதிய கடிதம், தம்பி விசுவநாதனுக்கும், அன்புத் தோழன் நெல்லையப்பருக்கும், எட்டயபுரம் வெங்கடேச ரெட்டுவுக்கும் எழுதிய கடிதங்களும் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

காற்றிடைச் சாளரம் -3

பயணிகளின்

கனிவான கவனத்திற்கு…

தயாராக இருக்கவும்.

தலையில் பறவையிடும் எச்சமாய்,

கிளையில் வந்தமரும் பறவையாய்,

கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,

வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,

உங்களுக்கான தடத்தில்

உங்களுக்கான வண்டி

எப்போதும் வரலாம்.

ஞானரதம் (9- 11)

ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம்! ஒழியாத ஏமாற்று, ஒழியாத வஞ்சனை, ஒழியாத கவலை, ஸாரமில்லை, ஸத்துக் கிடையாது: உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாய் இருக்கும் வாழ்க்கை; ஒவ்வொருவனும் மற்றவன் மீது பழி கூறுகின்றான். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப்படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனே தான் இருக்கிறான், ஆனால், “நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்புவதற்கிடமில்லையே” என்று நினைக்கிறான். பிறரை நம்புவதற்கிடமில்லையென்றெண்ணி ஏமாற்றுகிறான். ஐயோ மூடா நீ ஏமாற்றுவதனால், முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்றா நினைக்கிறாய்? மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். (மகாகவி பாரதியின் ஞானரதத்தில் இருந்து)...

அதிகமான் நெடுமான் அஞ்சி-10

அதிகமான் தனக்கு அவசியமாக இருந்தால் வேண்டிய மன்னர்களைத் துணையாகக் கூட்டிக்கொள்ளலாம் என்று கருதினான். சோழ மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஆள் அனுப்பினான். பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு வரப் போகிறானென்றும், தான் கோட்டையிலிருந்தபடியே போர் செய்யப் போவதாகவும் தெரிவித்தான். ’கோட்டைக்குள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு ஊறுபாடு யாதும் நேராது. ஒருகால் கோட்டைக்கு வெளியே வந்து போரிட வேண்டிய நிலை வந்தால் அப்போது உங்கள் உதவியை எதிர்பார்ப்பேன்' என்றும் எழுதியனுப்பினான். ஒளவையார் தூது சென்று நட்பு உண்டாக்கிய தொண்டைமானுக்கும் இப்படி ஓர் ஓலை போக்கினான். அவர்களிடமிருந்து இசைவான விடையே வந்தது. பாண்டிய சோழ மன்னர்களுக்குச் சேரனிடம் நட்பு இல்லை. ஆதலின் இந்தப் போர் பெரிதானால் தாமும் சேர்ந்து இரும்பொறையை வீழ்த்த வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.... (கி.வா.ஜ.வின் ‘அதிகமான் நெடுமான் அஞ்சி’ நூலின் 10வது பகுதி)...