காற்றிடைச் சாளரம் -3

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம்

பயணீயம்

பயணிகளின்

கனிவான கவனத்திற்கு…

தயாராக இருக்கவும்.

தலையில் பறவையிடும் எச்சமாய்,

கிளையில் வந்தமரும் பறவையாய்,

கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,

வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,

உங்களுக்கான தடத்தில்

உங்களுக்கான வண்டி

எப்போதும் வரலாம்.

.

அடித்துப் பிடிக்கிற அவசரமில்லை.

இலைத்தடத்தில்

இலை தின்றபடியே ஊரும்

நத்தை போல ஏறுங்கள்.

உங்கள் பயணம் முன்பதிவானது தானே?

.

கையசைத்து, கையசைத்து

வழியனுப்புவோரை அழையாதீர்.

அவர்களுக்கான வண்டிக்கு

அவர்கள் காத்திருக்கிறார்கள்.

.

சுகமான பயணத்துக்கு

சுமைகளற்று வாருங்கள்.

அடையாள அட்டை தேவையில்லை.

அவ்வாறு ஏதுமிருப்பின்

இடையில் நீங்கள்

இறக்கிவிடப்படலாம்.

.

இருக்கையைத் தேடி அலையாதீர்;

இருக்கையாகவே இருந்து விடுங்கள்.

.

ஏறும் முன் நீங்கள் பயணி.

ஏறிய பின் நீங்களே பயணம்.

.

பயணிகளின்

கனிவான கவனத்திற்கு

மன்னிக்கவும்…

இறுதிப் பயணிகளின்

கனிவான கவனத்திற்கு.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s