கண்ணன் பாட்டு – (16-21)

மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டு’ தொகுப்பில், கண்ணம்மாவாக கண்ணனை வர்ணித்து, சிருங்கார ரசத்தில் பாடிய 6 பாடல்கள் அற்புதமான அகச்சுவை உடையவை. அவை இங்கே...

காற்றிடைச் சாளரம் – 5

மனம் என்னும் துணி- காற்றிடைச் சாளரத்தில் அலைபாய்கிறது இந்தக் கந்தல் துணி....

தமிழ்த் தாத்தா (15-20)

புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ்நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை.  ‘வீரசோழியம்’ என்ற இலக்கண நூல் ஒரு பௌத்தரால் இயற்றப்பட்டது. அதில் பௌத்த சமயக் கருத்துக்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்து கொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றையெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பௌத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப் போலத் தொகுத்துக்கொண்டார்.... 1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையை சென்னையில் கொண்டுவந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்து கொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின் முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத்திருந்தார். மணிமேகலை கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார்.... (கி.வா.ஜ.வின் ‘தமிழ்த் தாத்தா’ நூலின் 15-20 அத்தியாயங்கள்)...