-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்

.
வஸ்திரம் போல மனது.
.
நழுவிக் கொள்கிறது …
அவ்வப்போது மறைக்கணும்.
.
மறைத்துக்கொள்கிறது….
அவ்வப்போது விலக்கணும்.
.
அழுக்காகிவிடுகிறது…
அவ்வப்போது வெளுக்கணும்.
.
கிழிந்துவிடுகிறது ….
அவ்வப்போது தைக்கணும்.
.
சாயம் போய்விடுகிறது …..
அவ்வப்போது மாற்றணும்.
.
சனியன் ….
கழற்றியெறிந்து
நிர்வாணமாகும்வரை
நிம்மதியில்லை பார்.
$$$